கார் புதிய தொழில்நுட்பங்கள் சிறப்பு பார்வை பகுதி-4

எரிபொருள் சிக்கனத்திற்கும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்துவதற்கும் ஏற்ற தொழில்நுட்பமாக ஸ்டாப் ஸடார்ட் சிஸ்டம் தொழில்நுட்பம் பயன்படுகிறது. சிக்னல்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் கார் எஞ்சினை தானாக நிறுத்தவும், ஆக்சிலேட்டர் பெடலை லேசாக அழுத்தினால், மீண்டும் எஞ்சின் ஸ்டார்ட் ஆகும் வகையில் வந்துள்ள அதிநவீன தொழில்நுட்பமே ஸ்டாப் ஸ்டார்ட் சிஸ்டம். இதற்காக, கொடுக்கப்பட்டுள்ள ஸ்விட்சை அழுத்தினால் மட்டுமே இந்த சிஸ்டம் இயங்கும். இந்த தொழில்நுட்பம் மூலம், 5 முதல் 10 சதவீதம் எரிபொருள் சிக்கனம் கிடைப்பதாக கார் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கீ லெஸ் என்ட்ரி சிஸ்டம்
சாவி இல்லாமல் காரை ரிமோட் மூலம் திறந்து மூடுவதற்கு கீ லெஸ் என்ட்ரி சிஸ்டம் என்று கூறப்படுகிறது. அவசரமாக செல்லும்போது காரை மூடுவதற்கு மறந்துவிட்டாலும், குறிப்பிட்ட தொலைவிலிருந்து காரை மூடவும், திறக்கவும் முடியும். இதேபோன்று, எஞ்சினை ரிமோட் மூலம் நிறுத்தவும், ஸ்டார்ட் செய்யவதற்கான ஆர்.கே.இ., தொழில்நுட்பமும் இதில் இணைந்துள்ளது.
சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம்
முன்பெல்லாம் கார் கண்ணாடிகளை சிறிய லிவரை சுழற்றி மூட வேண்டியிருந்தது. ஆனால், தற்போது ஸ்விட்ச்சை அழுத்தி, கார் கண்ணாடிகள் தானாக திறந்து மூடும் வகையில் வந்துள்ள நவீன தொழில்நுட்பம் சென்ட்ரல் லாக்கிங் எனப்படுகிறது. மேலும், டிக்கி கதவு, எரிபொருள் டேங்க் மூடி ஆகியவற்றையும் இந்த தொழில்நுட்பம் மூலம் திறந்து மூடலாம். இந்த தொழில்நுட்ப வசதி தற்போது அனேக கார்களில் வருகிறது.


Click it and Unblock the Notifications








