கார் புதிய தொழில்நுட்பங்கள் சிற்ப்பு பார்வை பகுதி-6

BMW Night Vvision System
நைட் விஷன் அசிஸ்ட்:

இரவு நேரங்களில் செல்லும்போது காருக்கு முன்னால் இருளில் செல்லும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் குறுக்கே வருவது குறித்து எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பத்திற்கு நைட்விஷன் அசிஸ்ட் என்று கூறப்படுகிறது. டேஷ்போர்டில் இருக்கும் சிறிய திரை மூலம் காருக்கு 1000 அடி தூரம் வரை முன்னால் செல்லும் வாகனங்களை பார்க்க முடியும். பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் இந்த தொழில்நுட்பம் வருகிறது. இதன் மூலம் கார் விபத்துக்களை அதிக அளவில் தடுக்க முடியும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

கிரவுண்ட் கிளியரன்ஸ்:

காருக்கும், தரைக்கும் இடையில் உள்ள இடைவெளி கிரவுன்ட் கிளியரன்ஸ் எனப்படுகிறது. ஆப் ரோடு எனப்படும் சாகச பயணங்களுக்கான கார்களில் கிரவுன்ட் கிளியரன்ஸ் அதிகமிருக்கும். அதேவேளை, அதிக வேகம் செல்லும் ரேஸ் கார்களில் பேலன்சாக செல்வதற்காக கிரவுன்ட் கிளியரன்ஸ் மிகமிக குறைவாக இருக்கும். சரியான அளவில் கிரவுன்ட் கிளியரன்ஸ் இல்லாத கார்களின் அடிப்பாகம் மேடுபள்ளங்கள் நிறைந்த சாலைகளிலும், வேகத்தடைகளை கடக்கும்போதும் இடித்துவிடும்.

வீல்பேஸ்:

கார்களில் முன் சக்கரத்தின் மையப்பகுதிக்கும், பின் சக்கரத்தின் மையப்பகுதிக்கும் இடைபட்ட தூரத்தை வீல்பேஸ் என்று ஆட்டோமொபைல் துறையினர் அழைக்கின்றனர். காரின் வேகம் மற்றும் அளவை பொறுத்து வீல்பேஸ் அளவு கணக்கிடப்படுகிறது. கார் பேலன்சாக செல்வதற்கு வீல்பேஸ் அடிப்படையானது என்பதால், இதற்கு கார் வடிவமைப்பு நிபுணர்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Friday, April 29, 2011, 10:36 [IST]
English summary
Automobile industry is growing rapidly with innovative technologies. Here we furnish the details of few car new technologies. It is verymuch useful for car buying aspirants.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+