கார் புதிய தொழில்நுட்பங்களின் சிறப்பு பார்வை பகுதி-5

வெளியில் உள்ள தட்பவெப்பத்திற்கு ஏற்ப காருக்குள் வெப்பத்தையும், குளிர்ச்சியையும் தாமாகவே கூட்டி குறைத்துக்கொள்ளும் தானியங்கி தொழில்நுட்பத்திற்கு கிளைமேட் கன்ட்ரோல் என்று கூறப்படுகிறது. இது குறிப்பிட்ட கார் மாடல்களில் மட்டுமே வருகிறது.
4வீல் டிரைவ்:
பொதுவாக கார்களில் இரண்டு சக்கரங்களுக்கு மட்டும் எஞ்சின் பவர் செல்லும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நான்கு வீல்களுக்கும் எஞ்சின் பவரை செலுத்தி காரை செலுத்தும் தொழில்நுட்பத்திற்கு 4 வீல் டிரைவ் கூறப்படுகிறது. இதை ஆல்வீல் டிரைவ் என்றும் அழைக்கின்றனர்.
முதன்முதலில் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட ஜீப்புகளில் 4 வீல் டிரைவ் தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டது. கரடு முரடான சாலைகளுக்கும், அதிக பிக்கப்புக்கும் 4வீல் டிரைவ் கொண்ட கார்கள் சிறந்ததாக கருதப்படுகிறது. ஆனால், இந்த வகை கார்கள் எரிபொருள் சிக்கனம் தராது என்பது இதன் மைனசாக கூறப்படுகிறது.
கெர்ப் வெயிட்:
காரின் மொத்த எடையை ஆட்டோமொபைல் துறையினர் கெர்ப் வெயிட் என அழைக்கின்றனர். இதில், காரின் ஸ்டாண்டர்டு பாகங்கள், எரிபொருள் ஆகியவையும் அடங்கும். இதர உதிரிபாகங்கள் மற்றும் பயணிகள் எடை கெர்ப் எடையில் சேராது.


Click it and Unblock the Notifications








