இந்திய பார்முலா ஒன் கார் பந்தய டிக்கெட் கட்டணம், அட்டவணை விபரம்!

Formula One Car Race
டெல்லி: இந்தியாவின் முதல் பார்முலாஒன் கார் பந்தய போட்டிக்கான டிக்கெட் விற்பனையை ஜேபி ஸ்போர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் துவங்கியுள்ளது. ரூ.2,500 முதல் அதிகபட்சமாக ரூ.35,000 வரை டிக்கெட் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஏர்டெல் இண்டியன் கிராண்ட் பிரிக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் முதல் பார்முலாஒன் கார்பந்தய போட்டிகள் வரும் அக்டோபர் 30ந் தேதி துவங்குகிறது.

டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் கட்டப்பட்டுள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் என்ற பிரம்மாண்ட ரேஸ் டிராக்கில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், போட்டியை காண்பதற்கான டிக்கெட் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. ஜேபி ஸ்போர்ட்ஸ் இன்டர்நேஷனல் அலுவலகத்தில் நேரிலும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டுகளை பெறலாம்.

இந்த போட்டிகள் ஒவ்வொன்றும் 60 சுற்றுகளை(லேப்) கொண்டது. 5.137 கிமீ நீளம் கொண்ட ரேஸ் டிராக் ஒரு சுற்றாக கணக்கிடப்படும் வகையில் போட்டிகள் நடைபெறும். இந்த போட்டிகளை காண்பதற்கான ஸ்டாண்டுகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு,

ஸ்டான்டு பெயர் இருக்கைகள் எண்ணிக்கை டிக்கெட் கட்டணம்
மெயின் கிராண்ட் ஸ்டாண்டு 20,156 ரூ.35,000
பிரிமியம் ஸ்டாண்டு 10,230 ரூ.12,500
ஸ்டார் ஸ்டாண்டு 14,912 ரூ.8,500
கிளாஸிக் ஸ்டாண்டு 36,838 ரூ.6,500
பிக்னிக் ஸ்டாண்டு 8,000 ரூ.6,000
நேச்சுரல் ஸ்டாண்டு 6,500 ரூ.2,500

பயிற்சி போட்டிகள் விபரம்:

28/10/2011

பிராக்டீஸ் செஷன் 1: காலை 10.00 மணிமுதல் 11.30 மணிவரை

பிராக்டீஸ் செஷன் 2: பிற்பகல் 2 மணிமுதல் 3.30 மணிவரை

29/10/2011

பிராக்டீஸ் செஷன் 3: முற்பகல் 11 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை

தகுதி சுற்று: 2 மணியளவில் துவங்கும்

30/10/2011

இறுதிச் சுற்று: பிற்பகல் 3 மணியளவில் துவங்கும்

டிக்கெட்டுகள் மற்றும் பிற விபரங்களை ஆன்லைன் மூலமாகவும் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, August 22, 2011, 12:59 [IST]
English summary
Formula One Airtel India Grand Prix Tickets have gone on sale in India Online. There are a total of 96,636 seats available at the Indian F1 race event and the tickets prices start at Rs. 2500 for natural stand and go up as high as Rs. 35,000 per ticket at the Main Grand Stand.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+