கார் புதிய தொழில்நுட்பங்கள் ஒரு பார்வை (பகுதி-1)

காரின் தொழில்நுட்பங்கள் குறித்து அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் விளக்கங்கள்
குரூஸ் கண்ட்ரோல்:
நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது, பயன்படும் அதிநவீன தொழில்நுட்பம் இது. நெடுஞ்சாலைகளில் ஒரே சீரான வேகத்தில் கார் செல்வதற்கு குரூஸ் கன்ட்ரோல் உதவுகிறது. உதாரணமாக 70 கி.மீ., வேகத்தில் செல்ல வேண்டும் என்றால், குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தில் 70 கி.மீ., வேகத்தை செட் செய்தால் போதும்.
ஆக்சிலேட்டரை மிதிக்காமலேயே கார் தானாக 70 கி.மீ., வேகத்தில் செல்லும். காரின் வேகத்தை குறைப்பதற்கு ஆக்சிலேட்டர் அல்லது பிரேக்கில் காலை வைத்து லேசாக அழுத்தினால் போதும், குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் தானாக நின்றுவிடும்.
தவிர, இதன் அட்வான்ஸ்டு தொழில்நுட்பம்தான் ஆட்டோமேட்டிக் குரூஸ் கன்ட்ரோல். இது காருக்கு முன்னால் மற்றும் பின்னால் வரும் வாகனங்களுக்கு ஏற்ப, காரின் வேகத்தை குறைத்துவிடும். முன்னால் செல்லும் வாகனத்துடன் மோதும் நிலை ஏற்பட்டால் கூட, தானியங்கி பிரேக்கை அழுத்தி காரை நிறுத்திவிடும்.
ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்(ஏ.பி.எஸ்.,)
எதிர்காலத்தில் அனைத்து கார்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய தொழில்நுட்பமாக கருதப்படுவதுதான் ஏ.பி.எஸ். திடீரென பிடிக்கும்போது காரின் டயர்கள் சறுக்கி சென்று விபத்தில் சிக்கிவிடும் நிலை ஏற்படுகிறது. இல்லாவிட்டால், பிரேக் ஷூக்கள் லாக் ஆகி, காரின் பேலன்சை குறைந்து நிலைதடுமாற செய்கிறது.
இந்த பிரச்சினைக்கு அருமருந்தாக வந்துள்ள புதிய தொழில்நுட்பம்தான் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம். காரை திடீரென பிரேக் பிடித்து நிறுத்தினாலும், சக்கரங்களுக்கு சீரான பிரேக்கிங் திறனை அனுப்பி சக்கரங்கள் சறுக்காதவாறு காரை நிறுத்துவதுதான் ஏ.பி.எஸ்., தொழில்நுட்பம்.
சாதாரண கார்களில் திடீரென பிரேக் பிடித்து நிறுத்துவதைவிட, ஏ.பி.எஸ்., தொழில்நுட்பம் காரை சில மீட்டர் முன்னதாகவே காரை நிறுத்திவிடும் என்பதும் இதன் விஷேசம். மழைக்காலங்களில் ஈரப்பதமான சாலைகளில் செல்லும்போதும், பிரேக் பிடித்தால் காரின் சக்கரங்கள் சறுக்காதவாறு ஏ.பி.எஸ்., பார்ததுக் கொள்ளும்.
(தொடரும்)


Click it and Unblock the Notifications








