டாடாவின் புதிய இன்டிகா இவி2 பற்றிய சிறப்பு பார்வை

By Super
Indica EV2
டிரக் தயாரிப்பில் உலகப்புகழ்பெற்ற இந்திய நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், முதன் முதலில் முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில் உருவான டாடா இன்டிகா காரை கடந்த 1998ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. டாடாவின் தயாரிப்பு என்பதால், வெகு விரைவில் சந்தையில் பிரபலமான மாடலாக இன்டிகா மாறியது.

அதிக இடவசதி, மைலேஜ் என தனி இடத்தை பிடித்த இன்டிகாவை சந்தை போட்டி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு ஆகியவற்றிற்கு தக்கவாறு, அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது டாடா. இந்த வகையில், மேலும் அதிக மைலேஜ் கொடுக்கும் வகையிலான புதிய இன்டிகா இவி2 காரை கடந்த மார்ச்சில் அறிமுகம் செய்தது டாடா .

லிட்டருக்கு 25 கி.மீ. செல்வதாக இந்திய ஆட்டோமொபைல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் சான்று அளித்ததால் சந்தையில் இன்டிகா இவி2வுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. தற்போது மார்க்கெட்டில் உள்ள ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்க துவங்கியுள்ள இன்டிகா இவி2 பற்றிய சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

எஞ்சின்:

பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி ஆகிய மூன்று எஞ்சின் மாடல்களில் புதிய இன்டிகா இவி2 கிடைக்கிறது. மூன்று மாடல்களும் எரிபொருள் சிக்கனத்தில் ஒன்றையொன்று விஞ்சுகின்றன. எல்பிஜி மாடலில் 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.எல்பிஜி எஞ்சின் அதிகபட்சம் 64.4 பிஎச்பி திறனையும், டீசல் எஞ்சின் 70 பிஎச்பி திறனையும் வெளிப்படுத்துகிறது. மூன்று மாடல்களும் 5 ஸ்பீடு டிரான்மிஷன் கொண்டதாக வருகிறது.

வெளிப்புற வடிவமைப்பு:

பழைய இன்டிகா வி2 மாடலின் வெளிப்புற வடிவமைப்பை ஒத்ததாகவே புதிய இன்டிகா இவி2 வந்துள்ளது. காரின் கலரின் ஒத்த கலரில் பம்பர், ரியர் வியூ மிரர், முன்பக்க கிரில் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. டாடா லோகோ, ஏரோடைனமிக் டிசைன் ஆகியவை காரின் வெளிப்புற வடிவமைப்புக்கு அழகு சேர்க்கிறது.மேலும், 14 இஞ்ச் அலாய் வீலும் இன்டிகா இவி2 காருக்கு மெருகேற்றுகிறது. பின்பக்க டேஞ்சர் விளக்குகள் வடிவமைப்பு மற்றும் பின்பக்க பம்பர் ஆகியவை காருக்கு ஸ்போர்ட்டி லுக்கை தூக்கி கொடுக்கிறது.

உட்புற வடிவமைப்பு:

யூஎஸ்பி மற்றும் ஆக்ஸ் போர்ட்டுடன் கூடிய சிங்கிள் டின் மியூசிக் சிஸ்டம், மரவேலைப்பாடுகளால் வேயப்பட்டுள்ள டேஷ்-போர்டு ஆகியவை பார்த்தவுடன் கவர்கிறது. மரவேலைப்பாட்டுடன் கூடிய சென்ட்ரல் கன்சோல் டாப் வேரியன்ட் மாடல்களில் வருகிறது. டேஷ்-போர்டில் பொருத்தப்பட்டுள்ள ஏ.சி. வென்டிலேட்டர்கள், சீ்ட் கவர்கள் ஆகியவை வாடிக்கையாளர்களின் பணத்துக்கு தரமிக்கதாக கொடுக்கவேண்டும் என்ற டாடாவின் பொறுப்புணர்வை பளிச்சென காட்டுகிறது. இன்டிகாவுக்கே உரித்தான உட்புற இடவசதியில் இவி2ம் சபாஷ் பெறுகிறது.

சொகுசு மற்றும் கையாளுமை

முதன்முறையாக ஹேட்ச்பேக் கார் ரகத்தில் ஆட்டோ-டிரைவ் அசிஸ்ட் தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது இன்டிகா இவி2. பயணத்தின்போது அலுப்பு தட்டாத வகையில் இருக்கைகள் சொகுசாக உள்ளன. டாப் வேரியன்ட் இன்டிகா இவி2 மாடல்களில் டாக்கோமீட்டர், பவர் வின்டோஸ், கீ-லெஸ் என்ட்ரி, பவர் ஸ்டீயரிங், ஆர்ம் ரெஸ்ட் ஆகியவை உள்ளன. மேலும், இதில் புதிய சஸ்பென்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளதால், அலுங்கல் குலுங்கல்கள் அவ்வளவாக தெரியவில்லை.

பாதுகாப்பு:

பாதுகாப்பு அம்சங்களிலும் இவி2 மற்ற ஹேட்ச் பேக் கார்களை ஒப்பிடும்போது மேம்பட்டு நிற்கிறது. 3 பாயின்ட் இ.எல்.ஆர்.சீட் பெல்ட், ஆன்ட்டி-லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம், கொல்லாப்சிபிள் ஸ்டீயரிங், ஆன்டி சப்மரைன் சீட்ஸ், பிரகாசமான விளக்குகள், பின்பக்க கதவுகளில் சைல்டு லாக் வசதி ஆகிய சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. டாப் வேரியன்ட் மாடல்களில் சென்ட்ரல் லாக்கிங் மற்றும் ஃபாக் லேம்ப் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

மைலேஜ்:

புதிய இன்டிகா இவி2 நகர்ப்புற சாலைகளில் லிட்டருக்கு 18 கி.மீ.தூரமும், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 24 கி.மீ. வரை செல்கிறது.

செயல்திறன்:

ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார்களுடன் ஒப்பிடும்போது, இன்டிகா இவி2 பிக்கப்பில் பிச்சு உதறுகிறது. இதில் ஸ்மார்ட மேனேஜ்மென்ட் தொழில்நுட்பத்துடன் எஞ்சின் இயங்குவதால், பிக்கப் அதிகமிருந்தாலும் எரிபொருள் சிக்கனமும் கிடைக்கிறது.

விலை:

இன்டிகா இவி2 பெட்ரோல் மாடல் ரூ.2.95 லட்சம் முதல் ரூ.3.58 லட்சம் வரையிலும், டீசல் மாடல் ரூ.3.95 லட்சம் முதல் ரூ.4.77 லட்சம் வரையிலும், டெல்லியில் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

குறைகள்:

இன்டிகா இவி2 வில் ஆங்காங்கே சில குறைபாடுகளும் தெரிகின்றன. ஏர்பேக்குகளை இன்னும் தரமானதாக கொடுத்திருக்கலாம். டீசல் மாடல்களில் மட்டுமே டாக்கோமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஏ.சி. நன்றாக வேலை செய்கிறது. கேபினை சீக்கிரமாகவே குளிர்விக்கிறது. ஆனால், ஏ.சி. வென்டிலேட்டர்களில் இருந்து இறைச்சல் சற்று கூடுதலாக கேட்கிறது. பேஸ் மாடல் இன்டிகா இவி2வில் பவர் ஸ்டீயரிங், பவர் வின்டோ மற்றும் ஏ.சி. இல்லாதது குறையாக படுகிறது. பில்டு குவாலிட்டியும் சுமாராக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 25, 2011, 12:12 [IST]
English summary
India’s first fully indigenous passenger car, Tata Indica in the year 1998 By Tata motors. The huge success of Tata Indica opened the gateway for the company in this segment and thus Tata came up with Indica eV2 which is loaded with new technology. One of the most trusted brands in India, Here are given some specifications and other features of Indica ev2.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+