மைலேஜ் ராலியில் லிட்டருக்கு 49.3 கிமீ சென்ற மாருதி ஆல்ட்டோ

Alto Mileage Rally
இந்தியாவின் கார் விற்பனையில் நம்பர் ஒன்னாக திகழும் ஆல்ட்டோ தற்போது மைலேஜ் கொடுப்பதிலும் நம்பர் ஒன் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது. மாருதி நடத்திய மைலேஜ் ராலியில் ஒரு லிட்டர் பெட்ரோலில் 49.3 கிமீ சென்று ஆல்ட்டோ அசத்தியுள்ளது.

முறையான டிரைவிங் மற்றும் அதிக மைலேஜ் பெறும் விதத்தில் காரை டிரைவிங் செய்வது குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில், 4 நகரங்களில் மைலேஜ் ராலியை மாருதி நிறுவனம் நேற்று நடத்தியது.

டெல்லி, கோல்கட்டா, ஜெய்ப்பூர் மற்றும் ஐதராபாத் ஆகிய 4 மாநகரங்களில் நடந்த இந்த மைலேஜ் ராலியில் 312 ஆல்ட்டோ கார்கள் பங்கேற்றன. இந்த போட்டியில் பங்கேற்றவர்களுக்கு ரூட் மேப், அதிக மைலேஜ் பெறுவதற்கான டிப்ஸ் கைடுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

போட்டியில் ஏராளமான பெண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பெரும் பரபரப்புடன் நடந்து முடிந்த இந்த போட்டியில் கோல்கட்டாவை சேர்ந்த திலிப் தாஸ் என்பவரின் ஆல்ட்டோ அதிகபட்சமாக லிட்டருக்கு 49.3 கிமீ மைலேஜ் கொடுத்து முதலிடத்தை பிடித்தது.

இதற்கடுத்து, ஐதராபாத்தை சேர்ந்த மேத்தி ஹாசன் என்பவரது ஆல்ட்டோ லிட்டருக்கு 48.2 கிமீ மைலேஜ் கொடுத்து இரண்டாம் பிடித்தது. ஐதராபாத்தை சேர்ந்த சாய் சுமந்த் என்பவரது ஆல்ட்டோ லிட்டருக்கு 47.6 கிமீ சென்று அசத்தியதோடு மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாருதி மார்க்கெட்டிங் பிரிவு தலைமை பொது மேலாளர் சஷாங்க் வத்சவா வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்," வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதிக மைலேஜ் கொடுக்கும் கார்களை விற்பனை செய்வதில் மாருதி முன்னோடியாக திகழ்கிறது.

வாடிக்கையாளர்கள் அதிக மைலேஜ் கொடுக்கும் விதத்தில் டிரைவிங் செய்வதை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த மைலேஜ் ராலி நடத்தப்பட்டது," என்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 22, 2011, 12:44 [IST]
English summary
India’s favourite and number one selling car Alto has delivered an amazing mileage of 49.3 in one litre of petrol here today. Mr Dilip Das while driving his Alto got this mileage during Alto Xplore Max Mileage Rally organized by Maruti Suzuki India Limited for all Alto/Alto K-10 owners in Kolkata.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+