விற்பனையில் உலகின் நம்பர் ஒன்னாக வாகை சூடிய மாருதி ஆல்ட்டோ

மாருதி நிறுவனத்தின் ஆல்ட்டோ கார் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை தக்கவைத்து வருகிறது. விற்பனையில் மாருதி நிறுவனம் பல புதிய மைல்கற்களை கடப்பதற்கு ஆல்ட்டோவும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
விற்பனையில் பல சாதனைகள் படைத்த ஆல்ட்டோ தனது சாதனை மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதித்துக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு விற்பனையில் புதிய இலக்கை கடந்து, உலகின் அதிகம் விற்பனையாகும் என்ற பெருமையை பெற்றுள்ளது ஆல்ட்டோ.
உலகின் அதிகம் விற்பனையாகும் கார்களாக திகழும் வோக்ஸ்வேகன் கோல்டு, ஃபியட் யூனோ ஆகிய கார்களின் விற்பனையை பின்னுக்குத் தள்ளி இந்த இமாலய சாதனையை புரிந்துள்ளது ஆல்ட்டோ.
இதுகுறித்த மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனர் சஷாங்க் வத்சவா கூறுகையில்," கடந்த ஆண்டு 3,00, 956 ஆல்ட்டோ கார்கள் விற்பனையானது. விற்பனையில் ஆல்ட்டோ உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.


Click it and Unblock the Notifications








