அரை டன் கொள்திறன் கொண்ட மினிடிரக்:பியாஜியோ அறிமுகம்

இந்திய சந்தையி்ல் மினிடிரக்குகளுக்கு அதிக கிராக்கி நிலவுகிறது.இதையடுத்து,டாடா,மஹிந்திரா, பியாஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு அளவுகளில் மினி டிரக்குகளை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி வருகின்றன.
மஹிந்திரா நிறுவனம் 1.5டன் கொள்திறன் கொண்ட ஜீனியோ என்ற பிப்அப் ரக மினி டிரக்கையும், அரை டன் கொள்திறன் கொண்ட ஜியோ என்ற மினிடிரக்கையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
இதற்கு போட்டியாக,மினிடிரக் சந்தையில் முன்னிலை வகிக்கும் பியாஜியோ நிறுவனமும்,அரை டன் கொள்திறன் கொண்ட மினி அபே என்ற சிறிய ரக சரக்கு வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குனர் கூறியதாவது:
"பியாஜியோவின் ஒரு டன் கொள்திறன் கொண்ட அபே லோடு ஆட்டோக்கள் இந்திய சந்தையில் நிலையான இடத்தை பிடித்துள்ளன.மேலும்,வாடிக்கையாளர்களின் தேவையை கவனத்தில்கொண்டு அரை டன் கொள்திறன் கொண்ட புதிய மினிடிரக்கை அறிமுகம் செய்துள்ளோம்.
அபே லோடு ஆட்டோ போன்று மினி அபே டிரக்கும் அமோக வரவேற்பை பெறும்.இன்னும் 4 மாதங்களில் மினி அபே டெலிவிரி கொடுக்கப்படும்.போக்குவரத்து நிறைந்த நகரங்களில் மினி அபே மிகவும் பயன்பாடு கொண்ட சரக்கு வாகனமாக இருக்கும்.மஹாராஷ்டிராவிலுள்ள தொழிற்சாலையில் இருந்து மினி அபே உற்பத்தி செய்யப்படும்,"என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








