புனேயில் தானியங்கி வாகன சோதனை மையம்: ஏஆர்ஏஐ திறக்கிறது

Leyland Bus
புனே: புனேயில் வர்த்தக வாகனங்களுக்கான தரக்கட்டுப்பாட்டு நிலைகளை கண்டறிவதற்கான தானியங்கி வாகன சோதனை மையத்தை இந்திய ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி நிறுவனம்(ஏஆர்ஏஐ) விரைவில் திறக்க உள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களின் தரக்கட்டுப்பாட்டு நிலைகளை சோதனை செய்து அவற்றை வர்த்தக ரீதியில் விற்பனை செய்வதற்கான சான்றை ஏஆர்ஏஐ வழங்கி வருகிறது.

இந்த நிலையில், அதிநவீன தொழில்நுட்பத்தில் வாகனங்களின் தரக்கட்டுப்பாட்டு நிலைகளை கண்டறியும விதத்தில் புதிய தானியங்கி வாகன சோதனை மையத்தை புனே நகரில் ஏஆர்ஏஐ அமைத்துள்ளது.

இந்த புதிய வாகன சோதனை மையத்தில் பஸ், டிரக், மினி டிரக் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் ஆகியவற்றின் தரகட்டுப்பாட்டு நிலைகளை தானியங்கி முறையில் கண்டறிய முடியும்.

ரூ.110 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சோதனை மையம் விரைவில் திறக்கப்பட இருக்கிறது.

இதுகுறித்து ஏஆர்ஏஐ இயக்குனர் ஸ்ரீகாந்த் மராத்தே கூறியதாவது:

"இந்த சோதனை மையத்தில் ஒவ்வொரு வாகனமும் 8 முதல் 10 தரக்கட்டுப்பாட்டு நிலைகளில் வைத்து சோதனை செய்யப்படும். பிரேக், கார்பன் புகை அளவு, எலக்ட்ரிக்கல் சிஸ்டம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும்.

புனேயை தொடர்ந்து முதல் கட்டமாக மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் தானியங்கி சோதனை மையங்கள் நிறுவப்படும்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 10, 2011, 16:17 [IST]
English summary
The Automotive Research Association of India (ARAI) in association with the Union ministry of road transport and highways, is all set to introduce automated checking of commercial vehicles in India through the new system named as Inspection and Maintenance (I&M).The project entailing the investment of Rs 110 crore, recommends the establishment of I&M lanes in the ten states on a pilot basis. Mr Shrikant Marathe, Director, ARAI said, “Every vehicle will pass through 8-10 stations to check the various systems including brakes, emissions, electrical systems bringing objectively to what is being done subjectively today.”
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+