பயணிகள் வாகன தயாரிப்பில் இறங்கும் லேலண்ட்-நிசான் கூட்டணி

இதைத்தொடர்ந்து, தங்களது அடுத்த விரிவாக்க திட்டங்களையும் அந்த கூட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், 8 முதல் 24 பேர் வரை செல்லும் வசதி கொண்ட புதிய மினி பயணிகள் வாகனத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அசோக் லேலண்ட்-நிசான் கூட்டு நிறுவனத்தின் தலைவர் சுமந்தரன் கூறியதாவது:
"டீசல் மற்றும் சிஎன்ஜியில் செல்லும் மினி டிரக் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதைத்தொடர்ந்து, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 8 முதல் 24 பேர் வரை செல்லும் புதிய பயணிகள் வாகனத்தை தயாரித்து அறிமுகப்படுத்த உள்ளோம்.
மேலும், 5 முதல் 5.5 டன் இழுதிறன் கொண்ட மினி டிரக்கையும் தயாரிக்க உள்ளோம். அடுத்த 4 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
அசோக் லேலண்ட் மற்றும் நிசான் நிறுவனங்களுக்கிடையிலான கூட்டு நிறுவனம் வெற்றிகரமான கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து கடந்த செப்டம்பரில் தோஸ்ட் என்ற மினி லோடு வேனை அறிமுகப்படுத்தின.
இதைத்தொடர்ந்து, தங்களது அடுத்த விரிவாக்க திட்டங்களையும் அந்த கூட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், 8 முதல் 24 பேர் வரை செல்லும் வசதி கொண்ட புதிய மினி பயணிகள் வாகனத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அசோக் லேலண்ட்-நிசான் கூட்டு நிறுவனத்தின் தலைவர் சுமந்தரன் கூறியதாவது:
"டீசல் மற்றும் சிஎன்ஜியில் செல்லும் மினி டிரக் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதைத்தொடர்ந்து, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 8 முதல் 24 பேர் வரை செல்லும் புதிய பயணிகள் வாகனத்தை தயாரித்து அறிமுகப்படுத்த உள்ளோம்.
மேலும், 5 முதல் 5.5 டன் இழுதிறன் கொண்ட மினி டிரக்கையும் தயாரிக்க உள்ளோம். அடுத்த 4 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

Click it and Unblock the Notifications