வாகனங்களின் விலையை 2.5 சதவீதம் உயர்த்த அசோக் லேலண்ட் திட்டம்

நாட்டின் மிகப்பெரிய கனரக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட், உற்பத்தி செலவீனம் அதிகரித்தையடுத்து, வாகனங்களின் விலையை கடந்த பிப்ரவரி மாதம் 2.5 சதவீதம் அளவுக்கு உயர்த்தியது. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியது.
இந்நிலையி்ல், வாகன தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீண்டும் விலையை உயர்த்த மு்டிவு செய்துள்ளது லேலண்ட்.
இதுகுறித்து அசோக் லேலண்ட் மேலாண் இயக்குனர் வினோத் கே தாசரி கூறுகையில்," உற்பத்தி செலவீனத்தை சரிகட்டுவதற்கு விலை உயர்வை தவிர வேறு வழியில்லை. எனவே, இந்த மாதத்தில் மீண்டும் வாகனங்களின் விலையை 2.5 சதவீதம் வரை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். மாடல்களுக்கு தக்கவாறு விலை உயர்வு வேறுபடும்," என்றார்.
இரண்டு மாதங்களுக்குள் விலையை 5 சதவீதம் அளவுக்கு லேலண்ட் உயர்த்தியிருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications








