பேட்டரியில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க அசோக் லேலண்டு திட்டம்
நாட்டின் மிகப்பெரிய கனரக வாகன தயாரிப்பாளராக திகழும் அசோக் லேலண்டு நிறுவனம் தோஸ்ட் மூலம் இலகு ரக வாகன தயாரிப்பிலும் இறங்கியது. அடுத்த தோஸ்ட் பிளாட்பார்மில் பயணிகள் வாகனத்தை அறிமுகப்படுத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், பேட்டரியில் இயங்கும் வகையில் பஸ், லாரி மற்றும் இலகு ரக வாகனங்களுக்கான தொழில்நுட்பத்தை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அசோக் லேலண்டு தெரிவித்துள்ளது.
சென்னையில் நடந்த ஆசிய-பசிபிக் ஆட்டோமொபைல் துறை கருத்தரங்கில் அசோக் லேலண்ட் நிர்வாக துணைத் தலைவர் சேதுராமன் கலந்துகொண்டார். கருத்தரங்கின் இடையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
"தோஸ்ட் மினிடிரக் உள்பட இலகு, நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கான எலக்ட்ரிக் தொழில்நுட்பத்தை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
ஆனால், இந்தியாவில் நிலவும் மின்பற்றாக்குறையையும் கருத்தில்க்கொண்டு புதிய எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
இருப்பினும், இந்தியாவில் எலர்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இன்னும் 5 முதல் 7 ஆண்டுகளில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் முழுமையாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
எனவே, அதற்குள் பேட்டரியில் இயங்கும் பஸ், டிரக், மற்றும் இலகு ரக வாகனங்களை தயாரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications









