ரூ.20 கோடி விலையில் அஸ்டன் மார்ட்டின் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்

Aston Martin Car
மும்பை: ஜேம்ஸ்பாண்டு படங்களில் புயல்வேகத்தில் பறக்கும் அஸ்டன் மார்ட்டின் ஸ்போர்ட்ஸ் கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பிரிட்டனை சேர்ந்த அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. இதன் ஸ்போர்ட்ஸ் கார்கள் ஜேம்ஸ்பாண்டு படங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் ஸ்போரட்ஸ் கார் மார்க்கெட் வளர்ச்சியை கண்டு, அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் தனது ஸ்போர்ட்ஸ் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

மும்பையில் நடந்த விழாவில் வி8 வென்டேஜ் மற்றும் ராபிட் உள்ளிட்ட அனைத்து கார் மாடல்களையும் அறிமுகம் செய்துள்ள அஸ்டன் மார்ட்டின், பெர்பார்மன்ஸ் கார்ஸ் நிறுவனத்தை இந்தியாவின் அதிகாரப்பூர்வ இறக்குமதியாளராக நியமித்துள்ளது.

இதுகுறித்து பெர்பார்மன்ஸ் கார்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்," மும்பையை தொடர்ந்து, அடுத்த மாதம் இறுதியில் டெல்லியில் இரண்டாவது ஷோரூமை திறக்க உள்ளோம். அஸ்டன் மார்ட்டின் கார்களை வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பையும் வழங்கியுள்ளோம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 30 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். ரூ.1.35 கோடி முதல் ரூ.20 கோடி வரையிலான விலையில், அஸ்டன் மார்ட்டின் கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளது," என்றார்.

More from DriveSpark

Article Published On: Monday, April 18, 2011, 10:55 [IST]
English summary
The most celebrated British sports car maker, Aston Martin has entered into the Indian car market with its 10ranges in the price of Rs1.35 – Rs20 crores as CBUs. The company’s Chief Commercial officer of the company said the Indian car market provided new opportunities and this attempt has been a step towards the expansion spree in the Asian region.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+