இந்த ஆண்டு 30 கார்களை விற்க அஸ்டன் மார்ட்டின் இலக்கு

Aston Martin
மும்பை: இந்த ஆண்டு 30 கார்களை விற்பனை செய்ய சொகுசு கார் தயாரிப்பாளரான அஸ்டன் மார்ட்டின் இலக்கு நிர்ணயித்துள்ளது.

பிரிட்டனை சேர்ந்த பழைமை வாய்ந்த சொகுசு கார் தயாரிப்பாளரான அஸ்டன் மார்ட்டின் நிறுவனம், சமீபத்தில் தனது சொகுசு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரூ.1.35 கோடி முதல் ரூ.20 கோடி வரை விலையிலான தனது அனைத்து மாடல்களையும் இநதியாவில் விற்பனை செய்ய இருப்பதாகவும் தெரிவித்தது.

இந்தியாவின் அதிகாரப்பூர்வ இறக்குமதியாளராக பெர்பார்மென்ஸ் கார் நிறுவனத்தையும் நியமித்தது. இந்நிலையில், இந்த ஆண்டு 30 கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெர்மான்ஸ் கார் நிறுவனத்தின் இயக்குனர் லலித் சவுத்ரி கூறியதாவது:

"இதுவரை 20 கார்களுக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளது. புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு இரண்டு முதல் ஆறு மாதங்களில் கார் டெலிவிரி கொடுக்கப்படும். மேலும், இந்த ஆண்டு 30 கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

அஸ்டன் மார்ட்டின் கார்களை பிரபலபடுத்துவதற்காக சென்னை, பெங்களுரு மற்றும் ஐதராபாத் நகரங்களில் ரோடு ஷோக்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். டெல்லியில் விரைவில் இரண்டாவது ஷோரூம் திறப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன," என்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 28, 2011, 14:52 [IST]
English summary
Aston Martin super luxury sports car maker from United Kingdom is all geared up to sell its premium cars in India with a well-defined target of about 30 units this year after the brand’s debut.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+