கடந்த நிதியாண்டில் அதுல் ஆட்டோ விற்பனை 60% அதிகரிப்பு

குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அதுல் ஆட்டோ, பயணிகள் மற்றும் சரக்கு ஆட்டோ தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மூன்று சக்கர வாகனங்களை உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது அதுல் ஆட்டோ.
கடந்த நிதியாண்டில் 17,406 ஆட்டோக்களை விற்பனை செய்துள்ளது அதுல் ஆட்டோ. இது அதற்கு முந்தைய நிதியாண்டின் விற்பனையை(12,345 ஆட்டோக்கள்)ஒப்பிடும்போது 60 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
இதன்மூலம், மூன்று சக்கர சந்தையில், வேகமான வளர்ச்சியை பெற்று வரும் நிறுவனமாக அதுல் ஆட்டோ மாறியுள்ளது.
இதுகுறித்து அதுல் ஆட்டோ இயக்குனர் விஜய் கெடியா குறிப்பிடுகையில்,"வளர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் நாடு முழுவதும் டீலர் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். குறிப்பாக, சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் விற்பனையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். எங்களது அனைத்து மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications








