ஏர் பேக்கில் தையல் சரியில்லை: ஏ-6 கார்களை திரும்பெறும் ஆடி

வோக்ஸ்வேகன் கீழ் இயங்கும் ஆடி சொகுசு கார்கள் பாதுகாப்பு அம்சங்களில் சிறந்த கார்களாக பெயர் பெற்றுள்ளன. இந்த நிலையில், 2012ம் ஆண்டு மாடல் ஏ6 செடான் கார்களின் ஏர்பேக்குகளில் பிரச்னை இருப்பதை ஆடி கண்டறிந்துள்ளது.
இதையடுத்து, பிரச்னைக்குரிய கார்களை திரும்ப பெற இருப்பதாக அமெரிக்க நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்திடம் ஆடியின் தாய் நிறுவனமான வோக்ஸ்வேகன் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து வோக்வேகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 8ந் தேதி முதல் மே 26ந் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட கார்களின் பக்கவாட்டு ஏர்பேக்குகளில் தையல் சரியில்லாததை சம்பந்தப்பட்ட சப்ளையர் கண்டறிந்துள்ளார்.
ஒருவேளை, விபத்து நேரிட்டால் ஏர்பேக்குகள் சரிவர விரிவடையாமல் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
எனவே, பிரச்னை இருப்பதாக கருதப்படும் 317 ஆடி ஏ6 கார்களை திரும்ப பெற உள்ளோம். திரும்ப பெறும் கார்களில் பிரச்னை இருப்பதை கண்டறிந்து சரிசெய்து தரப்படும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








