ஆடி ஏ8எல் மாடல் அறிமுகம்

By
Audi A8L
டெல்லி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஏ8எல் சூப்பர் சொகுசு காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஆடி கார் நிறுவனம்.

சொகுசு கார் தயாரிப்பில் ஜெர்மனியை சேர்ந்த ஆடி கார் நிறுவனம் உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.குறுகிய காலத்தில் இந்திய சந்தையி்ல் வேகமாக வளர்ந்து வரும் ஆடி நிறுவனம், இந்த ஆண்டில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக ஏற்கனவே அறிவி்த்திருந்தது.இந்த வரிசையில் ஏ8எல் சூப்பர் சொகுசு காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஆடி நிறுவனம்.

செடான் ரகத்தை சேர்ந்த உயர் ரக சொகுசு காரான இதன் பின்புற இருக்கை விசாலமான இட வசதியை கொண்டிருப்பதால்,எந்த இடையூறும் இல்லாமல் பயணம் செய்யலாம்.இதன் உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்புகள் மனதை மயக்குகிறது.கண்ணாடி கூரை காரின் அழகுக்கு மெருகூட்டுகிறது.சொகுசு வரிசையில் ஆடி ஏ8எல் மாடலில் தொழில்நுட்ப வசதிகள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது.

இதில் பொருத்தப்பட்டுள்ள 4.2 FSI பெட்ரோல் எஞ்சின் அதிக பிக்அப்பை தரும்.ஏர் சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் கொண்ட ஷாக்அப்சார்பர்,சாலையில் காரை மிதக்க வைக்கும் என்பதால்,இந்த காரில் பயணம் செய்யும்போது புதிய அனுபவத்தை பெறலாம்.

இதன் முகப்பு விளக்குகள் LED பல்புகள் பொருத்தப்பட்டுள்ளதால்,இரவு பயணத்தை பற்றிய கவலையை மனதிலிருந்து அகற்றும்.அகலமான டயரும்,டிஸ்க் பிரேக்குகளும் பாதுகாப்பை உறுதி செய்யும்.

இதுகுறித்து ஆடி இந்தியா வர்த்தகப்பிரிவு தலைவர் கூறியதாவது:

"சொகுசு கார் வாடிக்கையாளர்களுக்கு உயரிய தரத்துடன் கூடிய ஏ8எல் மாடல் புதிய அனுபவத்தை தரும்.கடந்த ஆண்டு விற்பனை நல்ல வளர்ச்சி கண்டது .இதை அதிகரிக்கும் வகையி்ல் ஏ8 மாடலை அறிமுகப்படுத்த உள்ளோம்.

ஏ8எல் மாடல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும்.மேலும்,இந்திய சந்தையில் ஏ8எல் மாடல் புதிய சகாப்தம் படைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,"என்று கூறினார்.

ஏ8எல் மாடலுக்கு ரூ.89லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 8, 2011, 10:36 [IST]
English summary
The German luxury car maker Audi has just launched its new luxury sedan A8 L posing innovative standards in the segment. With long wheels, and new powerful 4.2 FSI petrol engine the car is at the New Delhi showroom on display at the price tag of Rs89 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+