பிஎம்டபிள்யூ, பென்ஸை ஓவர் டேக் செய்ய 'ஆடி'க்கு ஆசை

Audi Car
வரும் 2015ம் ஆண்டில் இந்திய சொகுசு கார் மார்க்கெட்டின் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க ஆடி நிறுவனம் வரிந்து கட்டி களமிறங்குகிறது.

பிரிமியம் கார் மார்க்கெட்டில் ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென் மற்றும் ஆடி கார் நிறுவனங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

இந்திய மார்க்கெட் விற்பனையில் இந்த மூன்று நிறுவனங்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இதற்காக, அடுத்தடுத்து புதிய மாடல்களை அந்த நிறுவனங்கள் களமிறக்கி வருகின்றன.

முதல் இடத்திலிருக்கும் பிஎம்டபிள்யூ பல புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. மீண்டும் முதல் இடத்தை பிடிக்கும் முனைப்பில் மெர்சிடிஸ் நிறுவனம் கற்ற வித்தைகளையும் காட்டி வருகிறது.

இந்த நிலையில், சத்தமில்லாமல் வேகமாக விற்பனை வளர்ச்சியை எட்டி வரும் ஆடி கார் நிறுவனம் தற்போது பிஎம்டபிள்யூவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடிக்க திட்டங்களை தீட்டி வருகிறது.

ஆடி போட்டு வைத்துள்ள கணக்குகளின்படி அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாம் இடத்திற்கும், வரும் 2015ம் ஆண்டிற்குள் முதல் இடத்தை பிடிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஆடி இந்தியா தலைவர் மைக்கேல் பெர்ஷகே கூறியதாவது:

"அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பிரிமியம் மார்க்கெட்டில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவது சாத்தியமான ஒன்றுதான். வரும் 2015ம் ஆண்டிற்குள் மார்க்கெட்டில் முதலிடத்தை பிடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு திட்டமிட்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். வோக்ஸ்வேகன் குழுமத்திலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பிராண்டாக திகழ்கிறோம். விற்பனையை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Monday, December 12, 2011, 15:42 [IST]
English summary
Audi eyes on top spot of the luxury car segment. The company aims to reach the top spot by 2015. The company is planning to overtake German arch rival Mercedes Benz in next two years and becoming the top luxury car maker in the India by year 2015.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+