விரைவில் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தும் முனைப்பில் ஆடி

சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்தவும், எரிபொருள் பிரச்சினையை தீர்க்கும் விதத்திலும் எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் பணிகளை கார் நிறுவனங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் எதிர்கால சந்தையில் நிலையான இடம்பிடிக்க முடியும் என பல முன்னணி நிறுவனங்கள் கருதுகின்றன.
வோக்ஸ்வேகனின் கீழ் இயங்கும் ஆடி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமும், எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. தனது வெற்றிகரமான மாடல்களில் ஒன்றான ஏ-3 காரின் எலக்ட்ரிக் மாடலை விரைவி்ல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இ-டிரான் எலக்ட்ரிக் தொழில்நுட்பம் கொண்ட ஏ-3 எலக்ட்ரிக் காரின் எஞ்சின் இரண்டு பேட்டரி மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக திறன் கொண்ட லித்தியான் அயான் பேட்டரியில் இயங்கும் எஞ்சின் 130எச்பி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும்.
மேலும், 0-11 வினாடிகளில் 96 கி.மீ., வேகத்தை எட்ட வல்ல இந்த எலக்ட்ரிக் கார் அதிகபட்சம் 144 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் படைத்ததாக இருக்கும். ஹேட்ச்பேக் ரகத்தில் வரவுள்ள ஆடி எலக்ட்ரிக் கார் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரை அறிமுகப்படுத்துவதற்கான தேதி குறித்து ஆடி இதுவரை எந்த தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது.


Click it and Unblock the Notifications








