பாலிவுட் நடிகை குல் பனாகுக்கு க்யூ-5 கார் பரிசளித்தது ஆடி

ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக, திரையுலகை சேர்ந்தவர்களுக்கு ஆடி கார் என்றால் கொள்ளை பிரியம். அதிலும் பாலிவுட் நடிகர், நடிகையர் மத்தியில் ஆடி கார்களை தங்களது அந்தஸ்தின் அடையாளமாகவே கருதுகின்றனர்.
நடிகர் ஜான் ஆபிரஹாம், சஞ்செய் தத்,ஆமிர் கான் மற்றும் நடிகைகள் பிபாஷா பாசு, கேத்ரீனா கைப் உள்ளிட்ட பிரபலங்கள் ஆடி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்.
இந்த நிலையில், ஆடி நிறுவனமே தேடி வந்து க்யூ-5 சொகுசு எஸ்யூவியை பாலிவுடன் நடிகை குல் பனாகுக்கு பரிசாக அளித்துள்ளது. நடிகை குல் பனாக் 1999ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்றவர். மேலும், மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் முதல் 10 போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர்.
இந்த நிலையில், குறிப்பிட்டு சொல்லும்படியாக தோர், தூப் மற்றும் மனோரமா சிக்ஸ் பீட் உள்ளிட்ட சில பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும், இவர் ஒரு வாகன பிரியர். இவரிடம் கார்கள் தவிர ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளும் இருக்கிறது. எனவே, ஆட்டோமொபைல் துறையிலும் அவரது ஆர்வத்தை புரிந்துகொண்டு தேடிப் பிடித்து காரை பரிசளித்து கவுரவித்துள்ளது ஆடி.
மேலும், திரையுலக பிரபலங்களுக்கு அவ்வப்போது கார்களை ஆடி நிறுவனம் பரிசளித்து வருகிறது. நடிகை குல் பனாக்குக்கு பரிசளிக்கப்பட்ட ஆடி க்யூ-5 எஸ்யூவி ரூ.39.8 லட்சம் முதல் ரூ.45.98 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








