நவம்பரில் 425 சொகுசு கார்களை விற்பனை செய்த ஆடி
கடந்த மாதம் ஆடி நிறுவனத்துக்கு அதிர்ஷ்டமான மாதமாக அமைந்தது. பல்வேறு பிரச்னைகளால் கார் விற்பனை படுத்துக்கொண்டிருக்கும் நிலையில் ஆடி நிறுவனத்தின் கார் விற்பனை 66 சதவீதம் வளர்ச்சி கண்டது.
உயர்தட்டு மக்கள் மத்தியில் ஆடி கார்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில், கடந்த மாதம் ஆடி நிறுவனம் 425 கார்களை விற்பனை செய்துள்ளது.
இது கடந்த ஆண்டை காட்டிலும் 66 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அந்த நிறுவனம் 256 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி முதல் கடந்த நவம்பர் மாதம் வரை ஆடி நிறுவனம் மொத்தம் 5,117 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் விற்பனை 83.34 சதவீதம் அதாவது இருமடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் பெர்ஷகே கூறுகையில்,"இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் எங்களது விற்பனை அமோக வளர்ச்சி பெற்றுள்ளது. எங்களது இந்த ஆண்டு இலக்கை வெற்றிகரமாக எட்டுவோம் என்று நம்புகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








