நடிகர் சல்மான் கானுக்கு க்யூ-7 சொகுசு காரை பரிசளித்த ஆடி

அந்த வகையில், 'பாடி கார்டு' படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், அதன் ஹீரோவாக நடித்த சல்மான் கானுக்கு க்யூ-7 எஸ்யூவியை பரிசளித்துள்ளது ஆடி கார் நிறுவனம். மும்பையில் நடந்த விழாவில் அந்த காரை சல்மானிடம் வழங்கியது ஆடி.
க்யூ-7 எஸ்யூவியை ஆடி நிறுவனம் பரிசளித்ததற்கு மற்றொரு முக்கிய காரணமும் இருக்கிறது. பாடி கார்டு படத்தில் ஏராளமான காட்சிகளில் ஆடி க்யூ-7 எஸ்யூவி அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆடியின் பிராண்டு சின்னமும் ஒரு காட்சியில் பிரத்யேகமாக காட்டப்பட்டுள்ளது.
இதனால், பாடி கார்டு படத்தின் மூலம் கோடிக்கணக்கானவர்கள் மத்தியில் தனது பிராண்டு பிரபலமடைந்துள்ளதாக ஆடி கருதுகிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே க்யூ-7 எஸ்யூவியை சல்மானுக்கு ஆடி பரிசளித்துள்ளது.
பரிசளிக்கப்பட்ட ஆடி க்யூ-7 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ரூ.55 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ.75 லட்சத்திலும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








