இன்னும் 10 நாளில் இந்தியா வருகிறது ஆடி ஏ7 சொகுசு கார்

Audi A7
டெல்லி: தனது அல்ட்ரா மாடல் ஏ7 சொகுசு காரை வரும் 11 ந் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது ஆடி கார் நிறுவனம்.

வடிவமைப்பில் ஏ6 மாடலை சிறிது ஒத்திருந்தாலும், உயரம், நீளம் மற்றும் எடை ஆகிய அனைத்திலும் ஏ7 குறைந்திருக்கிறது. எடை குறைவாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த கார் ஸ்டீல் ப்ளஸ் அலுமினியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் வடிவமைப்புடன் கூடிய சொகுசு செடான் காரை விரும்பும் இளைஞர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஏ7 ஐ தேர்வு செய்யும் அளவிற்கு அனைத்து அம்சங்களும் இதில் கொட்டி கிடக்கிறது. ஏனேனில், இந்த காரை மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் மாடலுடன் மட்டுமே ஒப்பிட முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

போஸ் மியூசிக் சிஸ்டம் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வரவுள்ள ஏ7 பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பொருத்தப்பட்டுள்ள 3 லிட்டர் வி6 டிஎப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் 300 பிஎச்பி திறனையும், டீசல் எஞ்சின் 245 பிஎச்பி திறனையும் வெளிப்படுத்தும். மேலும், இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கி.மீ., வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது.

ஆடி கார்களின் அடையாள சின்னமான முன்பக்க கிரில், எல்.இ.டி., கொண்ட ரன்னிங் முகப்பு விளக்குகள், அடக்கமான முகப்பு தோற்றம் ஆகியவையும் வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களாக இருக்கும். இந்த கார் ரூ.62 லட்சம் முதல் ரூ.70 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 30, 2011, 14:47 [IST]
English summary
Audi to launch its luxury cum sports sedan car A7 India on May 11 at Price tag between Rs 62 – 70 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+