இந்தியா சாலைகளில் அசத்த வரும் கூரை இல்லாத ஆடி ஆர்8

Audi R8
டெல்லி: கூரை இல்லாத கன்வர்டிபிள் மாடலை அறிமுகப்படுத்த போகிறோம் என்று ஆடி அறிவித்ததுதான் தாமதம், இந்திய வாடிக்கையாளர்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையினரின் கவனம் எல்லாம் ஆர் 8 பக்கம் திரும்பியுள்ளது.

ஆம், தனது கூரை இல்லாத (கன்வர்டிபிள்) ஆர் 8 மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது ஆடி.

முழுக்க முழுக்க எடை குறைந்த பொருட்களை கொண்டு இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டுள்ள ஆடி ஆர் 8 மாடலின் வடிவமைப்பு கண்களை கொள்ளை கொள்கிறது. இதன் திறந்து மூடும் கூரை மெக்னீசியத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் மிகமிக குறைந்த எடை கொண்ட கூரையோடு வரப்போகிறது.

ஆடி கார்களின் செயல்திறன் அனைவரும் அறிந்த ஒன்றுதான். 5.2 லிட்டர் வி10 எஞ்சினுடன் வரும் ஆடி ஆர் 8 கார் 4.1 வினாடிகளில் 0-100 கி.மீ.,வேகத்தை எட்டி நம்மை சிலிர்க்க வைக்கிறது.

மேலும், ஆடியின் அதிகபட்ச வேகத்தை பார்க்க இந்திய வாடிக்கையாளர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆம், நம் ஊரில் ஆடியின் உச்சகட்ட வேகத்தை தொட்டு பார்க்க சாலைகள்தான் இல்லை. இது அதிகபட்சம் மணிக்கு 310 கி.மீ., வேகத்தில் செல்லும் ஆற்றலை பெற்றுள்ளது.

நேவிகேஷன், ஸ்டீரியோ சிஸ்டம்,எல்.இ.டி., விளக்குகள் என ஆடிக்கே உரிய அத்துனை சிறப்பம்சங்களும் இதிலும் உள்ளது. சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் பிரிவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஆடி ஆர்8 இந்திய வாடிக்கையாளர்கள் கையில் ஒரு ரவுண்டு வரப்போவது உறுதி என்பதை மட்டும் கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 24, 2011, 13:05 [IST]
English summary
Already an acclaimed scorcher, Audi is all set to bring in the topless and very hot Spyder here on Indian shores
மேலும்... #ஆடி #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+