மேம்படுத்தப்பட்ட ஏ-6 பிரிமியம் செடானை அறிமுகப்படுத்தியது ஆடி

ஜெர்மனியை பிறப்பிடமாக கொண்ட ஆடி நிறுவனத்தின் சொகுசு கார்கள் இந்திய சந்தையில் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. இதனால், தனது வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப தேர்வு செய்யும் வகையில் புதிய மாடல்களை ஆடி அடுத்தடுத்து அறிமுகம் செய்து வருகிறது.
இந்த நிலையில், தனது பிரிமியம் செடான் மாடலான ஏ-6 மேம்படுத்தப்பட்ட மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது ஆடி. கடந்த ஜூன் மாதம் இந்த காரின் அசெம்பிளிங்கை இந்தியாவில் துவங்கிவிட்டது ஆடி. இருப்பினும், சோதனை நிலைகளை கடந்து தற்போது டீலர்களை அடைந்துள்ளது ஆடி ஏ-6.
2.0 டிடிஐ எஞ்சினுடன் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் ஆடி ஏ-6, டீலர்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் ஆட்டோ மாத இதழ் நடத்திய சாலை சோதனையில் இதன் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 18.9 கிமீ மைலேஜ் கொடுத்ததாக தெரிவித்தது.
ஆடியில் பொருத்தப்பட்டுள்ள 4 சிலிண்டர் கொண்ட 2.0 லிட்டர் டிடிஐ எஞ்சின் 177 பிஎச்பி ஆற்றலை வெளி்ப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் 4.92 மீ்ட்டர் நீளமும், 1.87 மீட்டர் அகலமும், 1.46 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கிறது.
இதனால், ஆடி கார்களுக்கே உரிய உள்பக்கம் மிக தாராளமான இடவசதியை உணர முடிகிறது. ஹைட்ராலிக் தொழில்நுட்பத்துடன் கூடிய டிரைவ்ட்ரெயின் பேரிங் பொருத்தப்பட்டுள்ளதால், பயணத்தின் போது ஒரு சிறு அதிர்வு கூட தெரியவில்லை.
இலகு எடைகொண்டதாக இருக்கும் வகையில் அலுமினியம் கொண்டு இந்த கார் வடிவமைக்க்ப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வந்துள்ள இந்த ஏ-6 பிரிமியம் செடான் கார் டெல்லியில் ரூ.37.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








