ஆடி க்யூ5 சொகுசு எஸ்.யூ.வீ., கார் இந்தியாவில் அறிமுகம்

பல்வேறு புதிய அம்சங்களுடன் சொகுசு கார் விரும்பும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக ஆடி க்யூ5 களம் இறக்கப்பட்டுள்ளது. அதிக திறனை வெளிப்படுத்தும் 2.0 டிஎப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 3.0 டிடிஐ க்யூ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட இரு மாடல்களில் ஆடி க்யூ5 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆடி இந்தியா தலைவர் கூறியதாவது:
"ஆடி கார்களுக்கு வாடிக்கையாளர் தரும் ஆதரவு எங்களை நெகிழ வைத்துள்ளது. கடந்த ஆண்டு 3003 கார்களை விற்பனை செய்தோம். இது அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 81 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளோம்.
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தக்கவாறு, புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறோம். இந்த வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆடி க்யூ5 கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும்.
இந்த கார் வரும் ஏப்ரல் மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்படும். இதேபோன்று, அடுத்தடுத்து புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








