100கிமீ வேகத்தில் செல்லும் திறன் படைத்த ஆடி பேட்டரி கார்

முழுக்க முழுக்க நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கான தகுதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில் இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கலாம். இந்த காரில் ஆற்றல்வாய்ந்த பேட்டரிகளுடன் இரண்டு மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் மணிக்கு அதிகபட்சம் 100 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தது இந்த பேட்டரி கார். மேலும், கார்பன் பைபர் கொண்டு வடிவைக்கப்பட்டுள்ளதால் இந்த கார் வெறும் 480 கிலோ எடையை மட்டுமே கொண்டுள்ளது.
இந்த காரில் 21 இஞ்ச் சக்கரங்களும், மெல்லிய டயர்களும் பொருத்தப்பட்டுள்ளதால் வேகமெடுப்பதற்கும், ஓட்டுவதற்கும் மிக மிக எளிதாக இருக்கும் என்று ஆடி தெரிவிக்கிறது.
இதைவிட சிறப்பு இந்த காரின் பேட்டரியை வெறும் ஒரு மணிநேரம் சார்ஜ் செய்தால் போதும் என்கிறது ஆடி. மேலும், இந்த கார் மிகவும் பாதுகாப்பான காராக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ப்ராங்க்பர்ட்டில் நடந்த ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த பேட்டரி கார் எதிர்காலங்களில் நகர்ப்புறங்களில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று ஆடி கூறுகிறது.


Click it and Unblock the Notifications








