அக்டோபரில் 482 'பணக்கார' கார்களை விற்ற ஆடி

கடந்த சில மாதங்களாக சிறிய கார்கள் விற்பனை இறங்கு முகத்தில் இருந்தாலும், சொகுசு கார்களின் விற்பனை ஏறுமுகத்தில் இருக்கிறது. குறிப்பாக, ஆடி கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது.
இதனால், ஆடி நிறுவனத்தின் கார் விற்பனை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் செல்கிறது. கடந்த மாதம் இந்தியாவில் 482 சொகுசு கார்களை ஆடி விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரை ஒப்பிடும்போது கடந்த அக்டோபரில் ஆடியின் விற்பனை 35 சதவீதம் வளர்ந்துள்ளது.
மேலும், கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் ஆடி நிறுவனம் 4,692 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் விற்பனையை ஒப்பிடும்போது(2,535கார்கள்) அந்த நிறுவனத்தின் விற்பனை 85 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இந்த நிலையில், மார்க்கெட் போட்டியை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யவும் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்வதில் ஆடி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. மேலும், இரண்டாம் தர மற்றும் மூன்றாம் தர நகரங்களிலும் புதிய டீலர்களை திறக்கும் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








