டெல்லி ஆட்டோ ஷோவில் 3 புதிய கார்கள் அறிமுகம்: ஆடி

வரும் ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ கண்காட்சிக்கு பல்வேறு கார் நிறுவனங்களும் தங்களது தொழில்நுட்பத்தை பரைசாற்ற தயாராகி வருகின்றன.
நம் நாட்டில் நடைபெறும் ஆட்டோ கண்காட்சிகளில் மிகப் பெரியதாக கருதப்படும் இந்த கண்காட்சி இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கண்காட்சியில் பல புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதால் இந்திய ஆட்டோமொபைல் வல்லுனர்கள் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.
இந்த நிலையில், 2012ம் ஆண்டு டெல்லி ஆட்டோ கண்காட்சியில் 3 புத்தம் புதிய கார் மாடல்களை அறிமுக்பபடுத்த இருப்பதாக ஆடி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆடி இந்தியா தலைவர் மைக்கேல் பெர்ஷகே கூறியதாவது:
"அமெரி்க்கா, சீனாவுக்கு அடுத்து உலக அளவில் இந்தியா ஆடி நிறுவனத்துக்கு முக்கிய சந்தையாக கருதுகிறோம். எனவே, டெல்லி ஆட்டோ கண்காட்சியின் மூலம் எங்களது தொழில்நுட்ப வலிமையை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் பயன்படுத்திக்கொள்வோம்.
டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பேட்டரியில் இயங்கும் ஏ-3 செடான் கார், ஸ்போர்ட்டி அம்சங்கள் நிறைந்த எஸ்-6 லிமோசைன் கார் மற்றும் க்யூ வரிசையில் புதிய எஸ்யூவி ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








