லூதியானாவில் பிரம்மாண்ட ஆட்டமொபைல் கண்காட்சி

டெல்லியை சேர்ந்த ரிலியோ குயிக் என்ற மார்க்கெட்டிங் நிறுவனம், கடந்த ஆண்டு மும்பை,டெல்லி, சண்டிகர் மற்றும் பெங்களுரில், ஆட்டோமால் என்ற பெயரில் பிரம்மாண்ட ஆட்டோமொபைல் கண்காட்சியை நடத்தியது.
இந்த கண்காட்சியில் அனைத்து நிறுவனங்களின் வாகனங்கள் மற்றும் அதை சார்ந்த உபகரணங்கள் ஒரே இடத்தில் காட்சிக்கு வைக்கப்படுவதால், வாடிக்கையாளர்களுக்கும், வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பெரும் பயன்தரக்கூடியதாக அமைந்தது.
இந்நிலையில், இரண்டாம் நிலை நகரங்களை குறிவைத்து ஆட்டோமால் கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளது ரிலியோ குயிக் நிறுவனம். இதன்படி இந்த ஆண்டு லூதியானா நகரில் வரும் 22ந் தேதி முதல் 24ந் தேதி வரை ஆட்டோமால் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது ரிலியோ குயிக் நிறுவனம்.
சண்டிகர், பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம் மற்றும் காஷ்மீரை சேர்ந்த ஆட்டோமொபைல் துறை ஆர்வலர்களும், பொதுமக்களும் விதவிதமான வாகனங்களை ஒரே இடத்தில் கண்டுகளிக்கும் வாய்ப்பை பெறுவர் என ரிலியோ குயிக் தெரிவித்துள்ளது.
ரிலியோ குயிக் மேலாண் இயக்குனர் சந்தீப் கபூர் கூறுகையில்,"அனைத்து நிறுவனங்களின் வாகனங்களையும் ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் இருப்பதால், ஆட்டோமால் கண்காட்சிக்கு பலத்த வரவேற்பு உள்ளது. லூதியானாவை தொடர்ந்து, சென்னை,புனே,ஆமதாபாத்,ஐதராபாத், கொச்சி, கொல்கட்டா,கவுகாத்தி, பாட்னா மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களிலும் ஆட்டோமால் கண்காட்சியை நடத்த உள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








