வரும் நவம்பரில் ஆட்டோமேட்டிக் பியஸ்ட்டா: ஃபோர்டு

கடந்த ஜூலை மாதம் குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட தனது புத்தம் புதிய ஆல் நியூ பியஸ்ட்டா காரை ஃபோர்டு அறிமுகப்படுத்தியது.
சாதாரண பியஸ்ட்டா கிளாசிக் காரைவிட ஆல் நியூ பியஸ்ட்டா வாடிக்கையாளர்களிடையே அமோக ஆதரவை பெற்றுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டதால் குளோபல் பியஸ்ட்டா விற்பனை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
மாதத்திற்கு 610 ஆல் நியூ பியஸ்ட்டா கார்கள் விற்பனையாகிறது.இதனால், குஷியடைந்துள்ள ஃபோர்டு நிறுவனம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வரும் நவம்பரில் ஆட்டோமேட்டிக் வெர்ஷன் பியஸ்ட்டா காரையும் அறிமுகப்படுத்த உள்ளது.
புதிய ஆட்டோமேட்டிக் பியஸ்ட்டா காரும் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும் என்று ஃபோர்டு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட பியஸ்ட்டாவைவிட ஆட்டோமேட்டிங் வெர்ஷன் பியஸ்ட்டா கார் விலையில் ரூ.80,000 வரை கூடுதலாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஆட்டோமேட்டிக் வெர்ஷன் பியஸ்ட்டா பெட்ரோல் மாடல் ரூ.9.27 லட்சம் ஆரம்ப விலையிலும், டீசல் மாடல் ரூ.10.42 லட்சம் விலையிலும் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








