குட்டிக்கார் திட்டம்: பஜாஜுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிசான்

Bajaj ulc2
குட்டிக்காரை வடிவமைப்பதில் பஜாஜ் தாமதம் காட்டுவதாக கூறி, ரினால்ட்-நிசான் நிறுவனங்கள் அந்த திட்டத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தன. இந்த நிலையில், குட்டிக்கார் திட்டம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிசான் கூறியுள்ளது.

டாடா நானோ காருக்கு போட்டியாக பஜாஜ் ஆட்டோ புதிய குட்டிக்காரை வடிவமைக்கும் பணிகளை துவங்கியது. கார் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செய்யும் பணிகளை பஜாஜ் ஆட்டோவும், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையை ரினால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் கவனித்துக்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திட்டம் தொடர்பாக, பஜாஜ், ரினால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களுக்கு இடையில் முறையான ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை.

இந்த நிலையில், பஜாஜ் வடிவமைத்து வரும் குட்டிக்கார் தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தரநிலைகளில் இல்லை என்றும், குட்டிக்கார் வடிவமைக்கும் பணிகளை பஜாஜ் மிகவும் தாமதப்படுத்துவதாகவும் கூறி ரினால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் இந்த திட்டத்திலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தன.

இதனால், பஜாஜ் குட்டிக்கார் திட்டம் கேள்விக்குறியானது. இந்த நிலையில், குட்டிக்கார் திட்டம் பற்றி பஜாஜ் ஆட்டோவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், பஜாஜ் குட்டிக்கார் திட்டம் மீண்டும் புத்துயிர் பெறும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 21, 2011, 14:56 [IST]
English summary
Nissan Motors, the Japanese carmaker which had previously distanced itself from Bajaj Auto's Ultra Low Cost Car project has now stated that it was still holding discussions with Bajaj. A Senior executive from Nissan has stated that the carmaker would soon make a joint announcement about the developments in the ULC project.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+