இந்தியாவின் முதல் பார்முலா ஒன் கார் பந்தயத்திற்கு ஏர்டெல் ஸ்பான்சர்

மேலைநாடுகளில் புகழ்பெற்ற பார்முலா ஒன் கார் பந்தயங்கள் முதல் முறையாக இந்தியாவில் தடம் பதிக்க உள்ளன. டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் பல கோடி செலவில் புத் இன்டர்நேஷனல் என்ற பெயரில் இதற்கான பிரம்மாண்ட ரேஸ் டிராக் அமைக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 30ந் தேதி இந்த ரேஸ் டிராக்கில் பார்முலா ஒன் கார் பந்தயங்கள் துவங்க இருக்கின்றன. இந்த பந்தயங்களை காண்பதற்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன.
இந்த நிலையில், இண்டியன் கிராண்ட் ப்ரிக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பார்முலா ஒன் கார் பந்தயத்திற்கு நாட்டின் தொலைத்தொடர்பு சேவையில் முதலிடம் வகிக்கும் பார்தி ஏர்டெல் நிறுவனம் டைட்டில் ஸ்பான்சர் வழங்குகிறது.
எனவே, இந்த போட்டிகள் "ஏர்டெல் இண்டியன் கிராண்ட் ப்ரிக்ஸ்" என்று அழைக்கப்படும். இதற்கான, அதிகாரப்பூர்வமான சின்னத்தை(லோகோ) ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
லோகோ வெளியீட்டு விழாவில் பேசிய ஏர்டெல் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் கபூர் கூறுகையில்,"பார்முலா ஒன் பந்தயம் என்ற உடன் வேகம், த்ரில் ஆகியவை நம் கண்முன் நிழலாடுகிறது. இதே ஏக்கத்துடன் முதல் பார்முலாஒன் கார் பந்தயத்தை காண ஆவலோடு காத்திருக்கும் பல லட்சக்கணக்கான இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்பான்சர் வழங்குவதில் ஏர்டெல் பெருமையடைகிறது," என்றார்.


Click it and Unblock the Notifications








