வோக்ஸ்வேகன் பீட்டில் வாங்கினார் பாலிவுட் கவர்ச்சிக் கன்னி பிபாசா

பீட்டில் மீது நீண்ட நாட்களாக எனக்கு ஒரு கண் உண்டு என்று கண்ணடிக்கும் பிபாசா, பீட்டில் வாங்கவேண்டும் என்ற தனது கனவு தற்போது நிறைவேறியுள்ளதாக கூறுகிறார்.
காரை வாங்கியவுடன் அதற்கு பிராட் என்று பெயரிட்டு தனது தோழிகள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களிடம் காரை காண்பித்து மெய்சிலிர்க்கிறாராம் பிபாசா.
தற்போது ஓய்வு நேரங்களில் பிராட்டுடன்தான் பொழுதை கழிக்கிறாராம். எம்எச் 02 சிகே 700 பதிவெண் கொண்ட பிராடுடன் மும்பையில் வலம் வருகிறார் பிபாசா.
செவ செவ கலரில் பிபாசா வாங்கியிருக்கும் பீட்டில் காரில் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 116 பிஎஸ் பவரையும், 172 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
மேலும், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட பீட்டில் பல நவீன சொகுசு வசதிகளை தன்னகத்தே கொண்ட வோக்ஸ்வேகனின் காம்பெக்ட் தயாரிப்பு. பீட்டிலை தவிர பிபாசாவிடன் ஆடி க்யூ-7 பிரிமியம் எஸ்யூவியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








