இந்தியாவுக்கு மினி பிராண்டு கார்கள்: பிஎம்டபிள்யூ தலைவர் உறுதி

Mini Cooper
"அடுத்த ஆண்டு மினி பிராண்டு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என பிஎம்டபிள்யூ இந்தியா தலைவர் ஆண்ட்ரியாஸ் சாஃப் கூறினார்.

பிரிட்டனை சேர்ந்த மினி கார் நிறுவனம் பிரிமியம் ரக கார்கள் தயாரிப்பதில் புகழ்பெற்றது. மினி பிராண்டு கார்களின் தரமும், கட்டுமானமும் உலக அளவில் பேசப்படுகிறது. இந்த நிறுவனம் சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆடி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் பிரிமியம் ரக ஹேட்ச்பேக் கார்களை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. எனவே, போட்டியை சமாளிக்க மினி பிராண்டு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து பிஎம்டபிள்யூ பரிசீலனை செய்து வருகிறது.

இதுகுறித்து பிஎம்டபிள்யூ இந்தியா தலைவர் ஆன்ட்ரியாஸ் சாஃப் கூறுகையில்,"மினி பிராண்டு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து ஜெர்மனியிலுள்ள தலைமையகத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அங்கிருந்து கிரீன் சிக்னல் கிடைத்தால் இதுபற்றி அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிடுவோம்," என்று கூறினார்.

மினி பிராண்டு கார்கள் இந்தியா வரப்போவதாக தகவல்கள் கசிந்துவந்த நிலையில், இதுபற்றி பிஎம்டபிள்யூ தலைவர் முதன்முறையாக வாய் திறந்துள்ளார். மேலும், தற்போது மினி கார் நிறுவனம் கிளாசிக் மினி கூப்பர், மினி கூபே, கன்வெர்ட்டிபிள், கிளப்மேன், கன்ட்ரி மேன் ஆகிய கார் மாடல்களை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் எந்தெந்த கார் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்த தகவல்கள் எதையும் அவர் கூறவில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, September 15, 2011, 10:47 [IST]
English summary
BMW bosses have finally confirmed the launch of the Mini car brand in India. The British manufacturer of small premium cars has always been in India's radar but no official statement was made on it until recently. Mini, which is owned by BMW was expected to take on small premium cars launched by Mercedes-Benz and Audi. Mercedes-Benz has already confirmed the launch of its A-Class and B-Class cars in India. BMW India chief Dr Andreas Schaaf has been quoted in the media about Mini's launch in India. He said he was talking to his bosses in Germany to hasten the process of Mini's launch in India. Recent reports say Mini will be launched in India in 2012. It is yet unclear which models and engines will be launched here.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+