1000சிசி.,க்கு குறைவான பைக்குகளை அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ திட்டம்

BMW Super Bike
சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ சூப்பர் பைக்குகள் தயாரிப்பிலும் புகழ்பெற்று விளங்குகிறது. இநதியாவில் தனது சூப்பர் பைக்குகளை இறக்குமதி செய்து பிஎம்டபிள்யூவின் மோட்டார்சைக்கிள் பிரிவான பிஎம்டபிள்யூ மோட்டோராட் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், சூப்பர் பைக் சந்தையில் போட்டி அதிகரித்துள்ளதால் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் எதிர்பார்த்த அளவு விற்பனை அமையவில்லை. மேலும், பிஎம்டபிள்யூ விற்பனை செய்து வரும் பைக்குகளில் குறைந்தபட்ச பைக்கின் ஆரம்ப விலையே ரூ.18 லட்சமாக இருக்கிறது.

எனவே, பிஎம்டபிள்யூ பைக்குகள் வாடிக்கையாளர்களை கவரவில்லை. மற்ற நிறுவனங்களின் சூப்பர் பைக்குகளை ஒப்பிடும்போது பிஎம்டபிள்யூ பைக்குகளின் விலை அதிகமாக இருப்பதும், டீலர் நெட்வொர்க் குறைவாக இருப்பதும் விற்பனை எதிர்பார்த்தபடி அமையாததற்கு காரணம்.

இந்த நிலையில், மார்க்கெட்டில் கடும் போட்டியை கொடுக்கும் வகையில் 450சிசி, 650சிசி மற்றும் 800சிசி சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. வரும் ஜனவரியில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்யவும் முடிவு செய்துள்ளது.

இதில், முதலாவதாக தனது எப்800 எஸ்டி சூப்பர் பைக்கை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பைக் 89 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 798சிசி எஞ்சினுடன் வர இருப்பதாக தெரிகிறது. அதிகபட்சம் மணிக்கு 200கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் படைத்த இந்த சூப்பர் பைக்கில் ஏபிஎஸ் வசதியுடனும் வாங்கிக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, ஜி650ஜிஎஸ் 652சிசி சூப்பர் பைக்கை களமிறக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பைக் 50பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். முன்பக்கம் டிஸ்க் பிரேக், ஆப்ஷனல் ஏபிஎஸ் ஆகியவற்றோடு இது வரும். மேலும், இந்த சூப்பர் பைக் அதிகபட்சம் மணிக்கு 165கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 8, 2011, 15:10 [IST]
English summary
German luxury carmakers BMW's two-wheeler arm BMW Motorrads planning to launch new models under 1000cc segment by January. The first may come the BMW F800ST which gets a 798 CC 2-cylinder, 4-stroke, four valves per cylinder engine developing 85 HP (62.5 kW) at 8,000 rpm and 86 Nm at 5,800 rpm. The same has a maximum speed of 200 km/h. The engine is coupled with a 6 speed gearbox and is offered optional ABS.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+