கூபே மாடல் 6 சீரிஸ் மாடலையும் அறிமுகப்படுத்தியது பிஎம்டபிள்யூ

இந்தியாவில் சொகுசு கார்களுக்கு மார்க்கெட் கணிசமாக உயர்ந்து வருவதையடுத்து, விதவிதமான கார்களை பல முன்னணி சொகுசு கார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
வாடிக்கையாளர்களின் ரசனையை கருத்தில்க்கொண்டு திறந்து மூடும் கூரை வசதி கொண்ட 2012ம் ஆண்டு மாடல் புதிய 6 சீரிஸ் காரை பிஎம்டபிள்யூ கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது.
இந்த நிலையில், 2012ம் ஆண்டு புதிய 6 சீரிஸ் காரின் கூபே மாடலையும் அந்த நிறுவனம் தற்போது இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய கூபே 6 சீரிஸ் கார்கள் 650ஐ பெட்ரோல் மாடலிலும், 650டி டீசல் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், 362 பிஎச்பி திறனை அள்ளி இறைக்கும் ஆற்றல் கொண்ட 4.8லிட்டர் வி-8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட மாடல்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்வெர்ட்டிபிள் மாடலை விட தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள கூபே 6 சீரிஸ் விலையில் ரூ.10லட்சம் வரை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கூபே 6 சீரிஸ் 650டி ரூ.74.99 லட்சத்திலும், 650ஐ மாடல் ரூ.84.99 லட்சத்திலும் விற்பனை செய்யப்படும் என்று பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








