ஆடி க்யூ- 5க்கு சவால் விட புதிய எஸ்யூவி கார்: பிஎம்டபிள்யூ அறிமுகம்

BMW X3 SUV
டெல்லி: சர்வதேச மார்க்கெட்டில் ஜெர்மனியை தாயகமாக கொண்ட ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ சொகுசு கார் நிறுவனங்களுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்தியா உள்பட அனைத்து நாட்டு சந்தைகளிலும் மார்க்கெட் பங்களிப்பை அதிகரிக்க இரு நிறுவனங்களும் புதிய மாடல்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளன.

கடந்த இரு தினங்களுக்கு முன் ஆடி நிறுவனம் க்யூ-7 என்ற புதிய எஸ்யூவி காரை இந்தியாவில் ரூ.35.13 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இதற்கடுத்த நாளே பிஎம்டபிள்யூ நிறுவனம் அதே விலை ரகத்தில் புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது.

புதிய தலைமுறை அம்சங்களை கொண்ட சொகுசு எஸ்யூவி காரை ரூ.41.2 லட்சம் ஆரம்ப விலையில் பிஎம்டபிள்யூ களமிறக்கியுள்ளது. பழைய எக்ஸ்-3 எஸ்யூவியை விட புதுப்பொலிவுடன் கூடிய வடிவமைப்பு மற்றும் அதிக இடவசதி என புதிய எக்ஸ்-3 பல புதிய மாற்றங்களுடன் வந்துள்ளது.

ஜெர்மனியிலிருந்து பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள ஆலையில் புதிய எக்ஸ்-3 எஸ்யூவி கார் அசெம்பிள் செய்யப்படுவதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. 2.0 லிட்டர் எஞ்சினுடன் வரும் இந்த புதிய கார் 184 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

ஆல் வீல் டிரைவ் கொண்ட இந்த கார் ஆப்ரோடுகளில் அனாசயமாக செல்லும் திறன் வாய்ந்தது. இதன் உயர்ரக மாடல் ரூ.47.3 லட்சம் என பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, August 26, 2011, 12:22 [IST]
English summary
The competition between BMW and Audi is legendary. Both the German premium carmakers have been competing with each other in all international markets including India. With Audi emerging as the top selling premium SUV maker, BMW has responded by launching the next generation X3 SUV. The new X3 has been priced at Rs.41.2 lakhs (ex-showroom Delhi). The new BMW X3 will pose a challenge to the recently launched business edition of the Audi Q5. While the price of the X3 is slightly higher than the Q5, it compensates it by having greater interior space and a new exterior design. The previous X3 was considered too old in terms of design terms.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+