இந்த ஆண்டு விற்பனை இலக்கை எட்டுவது கடினம்: பிஎம்டபிள்யூ

இந்தியாவின் சொகுசு கார் விற்பனையில் தற்போது பிஎம்டபிள்யூதான் நம்பர் ஒன். கடந்த ஆண்டு விற்பனையை ஒப்பிடுகையில் மாதாமாதம் பிஎம்டபிள்யூ விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.
மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் 10,000 கார்கள் விற்பனை என்ற இலக்கை எட்டி விட பிஎம்டபிள்யூ இலக்கு வைத்து துடிப்புடன் செயல்பட்டு வந்தது.
ஆனால், பல்வேறு காரணங்களால் கார் விற்பனையில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு குறிப்பிட்ட இலக்கை எட்டுவதற்கான வாய்ப்பில்லை என்று பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
இதுகுறி்த்து பிஎம்டபிள்யூ தலைவர் ஆன்ட்ரியாஸ் சாப் கூறியதாவது:
"இந்த ஆண்டு 10,000 கார்களை விற்பனை செய்ய இலக்கு வைத்து செயல்பட்டோம். ஆனால், இலக்கை எட்டுவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை.
அதேவேளை, கடந்த மாதம் வரை 8,042 கார்களை விற்பனை செய்துள்ளோம். இது மொத்த சொகுசு கார் விற்பனையில் 40 சதவீதமாகும். அதேவேளை, அடுத்த ஆண்டு கார் விற்பனையை அதிகரிப்பதற்கு புதிய யுக்திகளை கையாள திட்டமிட்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








