ரேடியேட்டர் பிரச்னை: 32,000 கார்களுக்கு பிஎம்டபிள்யூ ரீகால்

தரத்திற்கும், சொகுசுக்கும் பெயர் பெற்ற பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்கள் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றன.
இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் 5 சீரிஸ் செடான் கார்கள், எக்ஸ்-5 எஸ்யூவி மற்றும் எக்ஸ்-6 எஸ்யூவிக்களின் ரேடியேட்டர்களில் பிரச்னை இருப்பது குறித்து ஏராளமான புகார்கள் வந்தன.
ரேடியேட்டர் சரியாக வேலை செய்யாததால் எஞ்சின் சூடாகி தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பதாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக பிஎம்டபிள்யூ ஆய்வு செய்தது.
அதில், ரேடியேட்டரில் பிரச்னை இருப்பது உறுதியானதால், கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்ட 32,000 கார்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளது.
இந்த திரும்ப பெறும் அறிவிப்பில் 5 சீரிஸ் கிரான் டுர்ஷிமோ, எக்ஸ்-5, எக்ஸ்-6 எஸ்யூவிக்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் முதல் இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
பிரச்னைக்குரிய கார்களில் புதிய ரேடியேட்டரை இலவசமாக மாற்றித்தர இருப்பதாகவும் பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
இந்த திரும்பபெறும் அறிவிப்பில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட பிரச்னைக்குரிய கார்களும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.


Click it and Unblock the Notifications








