சென்னை ஆலையில் 20,000 கார்களை உற்பத்தி செய்த பிஎம்டபிள்யூ

BMW X 6
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரிலுள்ள ஆலையில் நேற்று 20,000வது கார் உற்பத்தி செய்யப்பட்டதாக பிஎம்டபிள்யூ பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது.

கடந்த 2007ம் ஆண்டு ரூ.110 கோடி முதலீட்டில் ஸ்ரீபெரும்புதூரில் அசெம்பிளிங் ஆலை அமைத்து இந்தியாவில் பிஎம்டபிள்யூ கால் பதித்தது. பிஎம்டபிள்யூ கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்ததால், உற்பத்தியையும் வெகுவாக உயர்ந்தது.

பின்னர், சொகுசு கார் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த மெர்சிடிஸ் பென்சை பின்னுக்குத் தள்ளி முதலிடத்த பிடித்தது. கடந்த ஆண்டு நவம்பரில் இந்த ஆலையில் 10,000வதும் கார் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று தனது ஆலையின் உற்பத்தி பிரிவிலிருந்து 20,000வது கார் வெளிவந்ததாக பிஎம்டபிள்யூ பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

உற்பத்தி பிரிவிலிருந்து 20,000 வது கார் வெளிவருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிஎம்டபிள்யூ நிர்வாக இயக்குனர் ஜூர்ஜென் எடர் கலந்துகொண்டார். அப்போது பிஎம்டபிள்யூ கார் விற்பனை வெகுவாக அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

ஆண்டுக்கு ஒரு ஷிப்டில் 5,400 கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையில் 400 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, December 16, 2011, 11:10 [IST]
English summary
Germany based luxury car maker BMW rolled out of its 20,000th car in Sriperumpudur Plant near Chennai.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+