பென்ஸை தொடர்ந்து கார்களை லீசுக்கு விடும் தொழிலை துவங்கும் பிஎம்டபிள்யூ

BMW 530d
தனது சொகுசு கார்களை லீசுக்கு விடும் தொழிலை விரைவில் துவங்க இருப்பதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்கள் ஆட்சிமானம் செய்து வருகின்றன.

இரு நிறுவனங்களின் கார்களுக்கும் இந்திய மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில், தனது சொகுசு கார்களை லீசுக்கு விடும் தொழிலை ஸ்டார் லீஸ் என்ற பெயரில் பென்ஸ் நிறுவனம் சமீபத்தில் துவங்கியது.

லீசுக்கு விடும் கார்களின் சர்வீஸ் மற்றும் இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட பொறுப்புகளை எடுத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே செலுத்தினால் அவர்களுக்கு தனது சொகுசு கார்களை லீசுக்கு கொடுப்பதாக பென்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பென்ஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி திட்டத்தால், பிஎம்டபிள்யூவுக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.
மேலும், தனது வாடிக்கையாளர்களை பென்ஸ் லீஸ் கார்கள் பக்கம் போகாமல் தக்கவைத்துக்கொள்வதற்கு பிம்டபிள்யூ நிறுவனமும் கார்களை லீசுக்கு விடும் தொழிலை விரைவில் துவங்க உள்ளது.

இதுகுறித்து பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆன்ட்ரியாஸ் சாப் கூறியதாவது:

"கடந்த ஓர் ஆண்டாக இந்தியாவில் எங்களது கார்களை லீசுக்கு விடுவது குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு விரைவில் எங்களது சொகுசு கார்களையும் லீசுக்கு விட உள்ளோம்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 20, 2011, 15:18 [IST]
English summary
German premium carmaker BMW is all set to enter the lease car business in India. BMW India President Andreas Schaaf has said BMW was considering its own lease car business, BMW's primary competitor in India as well as across the world, Mercedes-Benz has already launched its own car leasing business called Star Lease.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+