புதிதாக 2 கான்செப்ட் மாடல் கார்கள்: பிஎம்டபிள்யூ அறிமுகம்

BMW i3
நியூயார்க் ஆட்டோ ஷோவில் சிறிய எலக்ட்ரிக் கார் உள்பட 2 கான்செப்ட் மாடல்களை பிஎம்டபிள்யூ காட்சிக்கு வைத்திருந்தது. இந்த இரண்டு மாடல்களும் பிஎம்டபிள்யூவின் முதல் ஐ சீரிஸ் கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஐ-3 கான்செப்ட் மாடல் நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு ஏற்ற வடிவமைப்பை பெற்றிருக்கும். இது பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் காராக இருக்கும். அடுத்து ஐ-8 கான்செப்ட் மாடல் கார். இது அதிக திறன் கொண்ட ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கார்களும் கவர்ச்சியாகவும், இலகு எடையுடன் இருக்கும் வகையில் விஷேச கண்ணாடிகள் மற்றும் ஃபைபர் கிளாஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. இதில், ஐ-3 கான்செப்ட் மாடல் வரும் 2013ம் ஆண்டில் உற்பத்தி துவங்கப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து, ஐ-8 ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தி துவங்கப்பட உள்ளதாக பிஎம்டபிள்யூ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூயார்க் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கார்களை பார்த்தவர்கள் கார் அதிக டிரான்ஸ்பரன்ட்டாக இருப்பதாக கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து காரின் வெளிப்புறத்தை வடிவமைத்த ரிச்சர்டு கிம் கூறுகையில்,"கான்செப்ட் மாடலில் இருக்கும் அளவுக்கு கண்ணாடிகள் வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படும் மாடலில் இருக்காது," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Monday, November 14, 2011, 13:16 [IST]
English summary
BMW has unveiled a pair of vehicles in New York. The two concepts are the first models to emerge from BMW's I series of vehicles. The i3 city car will be a small run about ideal for city rides and is powered by an electric motor. The i8 is a more powerful sports car and has a hybrid drive train.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+