ஸ்விப்ட்டை இந்த தீபாவளிக்கு புக் பண்ணினால் அடுத்த தீபாவளிக்கு டெலிவிரி

Maruti Swift
தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள்தான் இந்தியர்களின் மனங்கவர்ந்த காரான ஸ்விப்ட்டின் இன்றைய நிலை. ஆம், ஸ்விப்ட்டின் காத்திருப்பு காலம் 8 மாதங்களையும் தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

புத்தம் புது அம்சங்களுடன் புதிய ஸ்விப்ட்டை மாருதி களமிறக்கியது. முறைப்படி மார்க்கெட்டில் அறிமுகம் செய்வதற்கு முன்னரே 50,000 புக்கிங் என்ற வலுவான நிலையோடு களமிறங்கியது.

அறிமுகம் செய்யப்பட்ட பின் ஸ்விப்ட்டின் புக்கிங் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இது பெருமையான, சாதனையான விஷயம் என்றாலும் ஸ்விப்ட் காரை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களின் நிலை இதற்கு நேர்மாறாகிவிட்டது.

கார் வாங்கும் ஆசையையே வெறுத்துப்போகும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மாருதி மீது அதிருப்தி நிலவுகிறது. தங்களது கார் வாங்கும் ஆசையை ஸ்விப்ட்டுக்கு விலையாக கொடுத்துள்ள வாடிக்கையாளர் பலர் வேறு நிறுவனத்துக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஸ்விப்ட் வாங்குவது குறித்து ஒன்இந்தியா செய்தியாளர் ஒருவரின் நண்பர் ஆசை ஆசையாய் போன் செய்து அவரிடம் விசாரித்துள்ளார். ஸ்விப்ட் நிலைமையை எடுத்துக்கூறியும், அந்த கார் மீதுள்ள காதலால் மாருதி ஷோரூமிலேயே சென்று விபரங்களை கேட்டுவிடலாம் என்றார்.

அவரது ஆவலை பாதியில் முறிக்க வேண்டாம் என்ற எண்ணத்தோடும், ஸ்விப்ட் நிலவரத்தை நேரில் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடனும் நண்பருடன் நமது செய்தியாளரும் சென்றார். அங்கு செனறதும், ஷோரூம் சூப்பர்வைசர் ஸ்விப்ட் கார் குறித்த வசதிகளை பற்றி மூச்சுவிடாமல் அடுக்கி முடித்துள்ளார்.

ஸ்விப்ட் குறித்த விபரங்களை அவர் கூறியதை கேட்ட விஷயங்களை கேட்டதும், ஆர்வத்தை அடக்க முடியாத செய்தியாளரின் நண்பர், இப்போது ஸ்விப்ட்டை புக்கிங் செய்தால் எப்போது டெலிவிரி கிடைக்கும் என்று பட்டென்று கேட்டுள்ளார்.

இதே வேகத்தில் ஷோரூம் சூப்பர்வைசர் கூலாக சொன்ன வார்த்தைகள்தான் தலைப்பில் நீங்கள் படித்தது. ஆம், "இந்த தீபாவளிக்கு புக்கிங் செய்தால் அடுத்த தீபாவளிக்கு கண்டிப்பாக டெலிவிரி கிடைத்துவிடும்," என்று அவர் கூறியுள்ளார். நமது செய்தியாளருக்கு இது தெரிந்த விஷயம் என்றாலும், அவரது நண்பர் அப்படியே ஷாக் ஆகிவிட்டார்.

இருந்தாலும், நமது செய்தியாளர் கூறிய விஷயங்கள் அவரது நண்பரை சற்று ஆசுவாசப்படுத்தியதோடு, தனது கார் வாங்கும் முடிவை தள்ளிப்போட்டு விட்டார்.

இருந்தாலும், உண்மை நிலை அதுதானே. மானேசர் தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் 14 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இன்னும் பேச்சுவார்த்தைகளில் உருப்படியான முடிவுகள் எட்டப்படவில்லை. இதனால், ஸ்ட்ரைக் தொடர்ந்து நீடிக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில், ஸ்விப்ட் உற்பத்தி எப்போது சீரடையும். புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு கார் எப்போது டெலிவிரி கொடுக்கப்படும் என்ற பல கேள்விகளுக்கு யாரிடம் பதில் கேட்பது என்ற புரியாத நிலை நீடிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, October 21, 2011, 11:50 [IST]
English summary
Several people who have already booked the Swift had expressed concerns about delayed deliveries. Auto.oneindia.in tried to ascertain how the situation was at a Bangalore based showroom and the results are nothing short of a shocker. The writer visited the showroom and inquired about the Swift. The representative at the showroom spoke about the Swift's all too well known features and also explained the new changes as compared to the old Swift. When asked about the booking amount and waiting periods, he only said the strike had made getting the Swift very difficult. When prodded again he asked when was the writer intending to buy the Swift. When the reply was this Diwali, his candid reply was people who book the Swift this Diwali can only get it the next Diwali!
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+