அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ 1,300 கோடி முதலீடு: போஷ் அறிவிப்பு

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் போஷ் நிறுவனம், வாகனங்களுக்கான தொழில்நுட்ப உதவி மற்றும் உதிரிபாகங்கள் தயாரித்து வழங்குவதில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இந்தியாவில் பெங்களுர், நாசிக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிற்சாலை அமைத்துள்ளது.
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை சில ஆண்டுகளாக நல்ல வளர்ச்சி கண்டு வருவதால், வாகனங்களுக்கான உதிரிபாகங்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால், போஷ் நிறுவனத்தின் விற்பனையும் வளர்ச்சி கண்டு வருகிறது.
தேவைக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், போஷ் நிறுவனம் தனது தொழிற்சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிகளவில் முதலீடு செய்து வருகிறது. கடந்த ஆண்டில் ரூ.302 கோடியை போஷ் நிறுவனம் தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக முதலீடு செய்தது. மேலும், அடுத்து வரும் ஆண்டுகளில் தொடர்ந்து முதலீட்டை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக போஷ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து போஷ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விஸ்வநாதன் கூறியதாவது:
"நாடு முழுவதும் உள்ள போஷ் தொழிற்சாலைகளில் பெங்களுரில் உள்ள தொழிற்சாலைதான் கடந்த ஆண்டு அதிக முதலீட்டை பெற்றது. கடந்த ஆண்டு நிறுவனத்தின் மொத்த முதலீட்டில் 65 சதவீதம் அளவிற்கு பெங்களுரில் உள்ள தொழிற்சாலை பெற்றது.
மேலும். விற்பனையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்று வருகிறது. இதையடுத்து. 2011-- முதல் 2013ம் ஆண்டுக்கு இடைப்பட்ட அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ 1.300 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். என்று கூறினார். மேலும், இந்த ஆண்டுக்குள் நிறுவனத்தின் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ.400கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








