நானோ காரை அறிமுகப்படுத்துமாறு டாடாவுக்கு பிரேசில் அரசு அழைப்பு

இலங்கை, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் நானோ காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இன்று வங்கதேசத்திலும் நானோ அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த நிலையில், பிரேசலில் நானோ காரை அறிமுகப்படுத்துமாறு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. பிரேசில் நாட்டின் பிரபல மாகாணத்தின் கவர்னர் மினஸ் கெரெய்ஸ் 8 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார்.
தனது சுற்றுப்பயணத்தின்போது டாடா மோட்டார்ஸ் தலைவர் ரத்தன் டாடாவை அவர் சந்தித்து பேசினார். அப்போது, நானோ காரை தங்கள் நாட்டில் அறிமுகப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கருத்தரங்கு ஒன்றில் பேசுகையில், நானோ காரை பிரேசிலில் அறிமுகப்படுத்துமாறு ரத்தன் டாடாவை கேட்டுக்கொண்டுள்ளேன். பிரேசில் மார்க்கெட்டில் நானோ காரை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம்.
மேலும், டாடா மோட்டார்ஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் பிரேசிலில் முதலீடு செய்வதை வரவேற்கிறோம். இதன் மூலம் இருநாட்டுக்கும் இடையிலான வர்த்தக உறவு மேலும் வலுப்படும்,"என்றார்.
இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் நானோவை அறிமுகம் செய்யும் பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்த நிலையில், தென் அமெரிக்காவின் பெரிய வாகன சந்தைகளில் ஒன்றான பிரேசிலில் நானோவை அறிமுகப்படுத்துமாறு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








