கேடில்லாக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் திட்டம்

By
GM Cadillac
டெல்லி: அடுத்த இரண்டு ஆண்டுகளில் கேடில்லாக் சொகுசு காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்,இந்தியாவில் செவரோலெட் பிராண்டில் கார்களை தயாரித்து வருகிறது.இந்திய சந்தையில் செவரோலெட் பிராண்டு கார்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.இதையடுத்து,ஜெனரல் மோட்டார்ஸ் புதிய கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில்,இந்தியாவில் சொகுசு கார்களுக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது.சொகுசு கார் சந்தையின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல்,முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் திணறி வருகின்றன.இதை உணர்ந்து கொண்ட ஜெனரல் மோட்டார்ஸ் தனது புகழ்பெற்ற கேடில்லாக் பிராண்டு சொகுசு கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியவதாவது:

"செவரோலெட் பிராண்டு மாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒரு செவரோலெட் கார் விற்பனையாகிறது என்பதை கூறிக்கொள்வதில் பெருமையடைகிறோம்.

கடந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ்,பிஎம்டபிள்யூ,ஆடி உள்ளிட்ட நிறுவனங்களின் சொகுசு கார் விற்பனை 70 சதவீதம் உயர்ந்துள்ளது.இதைக்கருத்தில்கொண்டு கேடில்லாக் சொகுசு காரை அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

செவரோலெட் கார்களை போன்றே கேடில்லாக் காரும் மக்களிடம்,அதிக வரவேற்பை பெறும். கேடில்லாக் காரை விற்பனை செய்வது மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சர்வீஸ் தருவது போன்றவற்றிலும் கவனம் செலுத்துவோம்.இந்தியாவில் கேடில்லாக் சொகுசு கார் ரூ.60லட்சம் முதல் ரூ.70லட்சம் விலை கொண்டதாக இருக்கும்,"என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 15, 2011, 12:53 [IST]
English summary
The immense response to the Chevrolet brands in the Indian market has instigated General Motors to launch its premium Cadillac in another two years, said its top official.The luxury car market in 2010 had the combined growth volume of 70% from BMW, VW, Audi and Mercedes. The increase in the growth indicated the demand for new branded luxury cars in the Indian market,With the launch slated for India it might cost Rs6070 lakhs,he added.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+