இந்திய சந்தையில் காலூன்றும் எலக்ட்ரோவயா பேட்டரி நிறுவனம்

By
Electrovaya Logo
டெல்லி: ஆட்டோமொபைல் நிறுவனங்களின் சரணாலயமாக மாறிவிட்ட இந்தியாவில், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமின்றி,ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனங்களும் காலூன்ற ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த வரிசையில்,வாகன பேட்டரி தயாரிப்பி்ல் புகழ்பெற்ற கனடா நாட்டை சேர்ந்த எலக்ட்ரோவயா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கால் பதிக்க உள்ளது. வாகனங்களுக்கான பேட்டரிகளை ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்ய எலக்ட்ரோவயா திட்டமிட்டுள்ளது.

ஆட்டோமொபைல் துறை வளர்ச்சியில் உலகின் இரண்டாவது இடத்தை பி்டித்துள்ள இந்தியாவில், பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள், எலக்ட்ரிக் மாடல்களை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன.

இதனால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவைப்படும் பேட்டரிகளுக்கு இந்தியாவில் கணிசமான கிராக்கி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் விதமாக எலக்ட்ரோவயா இந்தியாவில் காலூன்ற உள்ளது.

இதுகுறித்து எலக்ட்ரோவயா தலைமை நிர்வாக அதிகாரி கூறியதாவது:

"ஆட்டோமொபைல் துறை பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் புதிய கோணத்தில் பயணிக்க துவங்கியுள்ளது. கார், பைக் மட்டுமின்றி எலக்ட்ரிக் பஸ்களை தயாரிக்கவும் பல நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

குறிப்பாக,மாநகரங்களில் இயக்கும் வகையில் எலக்ட்ரிக் பஸ்களை தயாரிக்கும் பணிகளில் சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதனால்,எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான லித்தியம் அயான் சூப்பர் பாலிமர் தொழில்நுட்பம் கொண்ட பேட்டரிகளுக்கு கடும் கிராக்கி ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.

இதையடுத்து, இந்தியாவின் வாகன தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூட்டு சேர்ந்து,பேட்டரிகளை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். பேட்டரிகளை தயாரிக்க ஹீரோ நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

விரைவில் கூட்டு நிறுவனத்தை அமைக்க உள்ளோம். அதன்பிறகு,ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களுக்கு தேவையான நவீன தொழில்நுட்பம் கொண்ட பேட்டரிகள் தயாரிக்கப்படும். டாடா நிறுவனமும், தனது நானோ காரின் எலக்ட்ரிக் மாடலுக்கு எங்களது பேட்டரியை பயன்படுத்தும் வகையில், ஒப்பந்தம் செய்துகொள்ள ஆர்வமாக உள்ளது,"என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Friday, February 4, 2011, 10:49 [IST]
English summary
Canada’s leading auto battery manufacturer Electrovaya is exploring horizons and intends to set up a joint venture in India. The aim of the joint venture would be to supply state-of-art Lithium battery for electric buses for mass transportation.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+