10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அக்டோபரில் கார் விற்பனை வீழ்ச்சி

Car Sales Fell
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் கார் விற்பனை படு வீழ்ச்சி கண்டுள்ளது.

பெட்ரோல் விலை அடிக்கடி அதிகரித்து வருவது, கார் கடன் வட்டி உயர்வு, பண வீக்கம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில மாதங்களாக கார் விற்பனை கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் பண்டிகை காலம் என்பதால் கார் விற்பனை நல்ல ஏற்றம் பெறும் என்று கார் நிறுவனங்கள் கருதின. மேலும், வாடிக்கையாளர்களை இழுக்க பல்வேறு சலுகைகளை வாரி வழங்கின. கார் டீலர்களும் தங்கள் பங்குக்கு சலுகைகளை வழங்கினர்.

இவை அனைத்திற்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை. கடந்த 2000ம் ஆண்டு டிசம்பரிலிருந்து இல்லாத அளவிற்கு கார் விற்பனை படு வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் 1,81,704 கார்கள் விற்பனையாகி இருந்தது. ஆனால், கடந்த மாதம் வெறும் 1,38,521 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. இதை ஒப்பிடும்போது கடந்த மாதம் கார் விற்பனையில் கால் பங்கு அளவுக்கு(24%) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கார் விற்பனை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதால் பல முன்னணி நிறுவனங்கள் கலக்கமடைந்துள்ளன. கார் விற்பனையை அதிகரிப்பதற்கு புதிய மாடல்களையும், புதிய யுக்திகளை கையாளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, November 11, 2011, 14:03 [IST]
English summary
The Indian car market is not at the same level as it was last year. This is very clear if we notice the declining sales of all major car makers. The body of all Indian vehicle manufacturers – Society of Indian Automobile Manufacturers has stated that car sales in fact fell by a massive 24 per cent in October. This drop is by far the sharpest fall recorded in more than 10 years.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+